கேதர்நாத் கோவிலில் இன்று பரிகார பூஜை!

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் மலை மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் பாய்ந்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் பலியானார்கள். ஆனால் பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோவில் சேதம் அடையவில்லை. கோவிலுக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதனால் பூஜைகள் நிறுத்தப்பட்டன. கோவிலில் மீண்டும் பூஜை நடத்துவதற்காக கடந்த 3-ந் தேதி முதல் திருப்பணிகள் தொடங்கின. 86 நாட்களுக்குப்பிறகு இன்று (புதன்கிழமை) முறைப்படி பூஜைகள் தொடங்குகின்றன. கேதர்நாத்-பத்ரிநாத் குழுவினரின் மேற்பார்வையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
sep 11-uttarakhand-praying-
மலைப்பாதை சீர்செய்யப்படாததால் ஹெலிகாப்டர் மூலமாக 24 அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் கோவிலில் தங்கி பணியாற்றுகின்றனர். சுவாமி ஹன்ஸ்தேவாச்சாரிய சங்கராச்சாரியார் முன்னிலையில் பூஜைகள் தொடங்குகின்றன. அவர் கூறுகையில், ‘இயற்கை பேரிடர் காரணமாக நீண்ட காலமாக பூஜைகள் நிறுத்தப்பட்டதற்காக சிவபெருமானிடம் மன்னிப்பு கோருவோம்’ என்றார். இன்று நடக்கும் பரிகார பூஜைகளில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி விஜய் பகுகுனா மற்றும் மந்திரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். கேதர்நாத் கோவிலில் பூஜை தொடங்கினாலும் கோவிலுக்கு செல்லும் பாதை இன்னும் சரி செய்யப்படாததால், கேதர்நாத் கோவிலுக்கு, இப்போது பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.” என்றார்.ஆனால் மோசமான வானிலை காரணமாக அவர்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.

86 days after Uttarakhand tragedy, prayers resume at Kedarnath Temple

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
The deathly silence brooding over Kedarnath since the June calamity hit Uttarakhand broke early on Wednesday morning by the chanting of Vedic hymns as prayers resumed at the Himalayan shrine, 86 days after ravaging floods left over 400 people dead in the Kedar valley.