September 18, 2021

கென்னடி மகள் ஜப்பானிற்கான அமெரிக்க தூதகராக பொறுப்பேற்றார்

அமெரிக்காவின் 38 வது அதிபராக இருந்தவர் ஜான் எப் கென்னடி. கடந்த 1961ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தார். 1963ம் ஆண்டு, நவம்பர் 22ம் தேதி, டெக்சாஸ் மாநிலம் டல்லஸ் நகரில் மனைவி ஜாக்குலின் உடன் காரில் சென்று கொண்டிருந்த போது, சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மகள் கரோலின் கென்னடி. ஒரு வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும் உள்ளார். கென்னடியின் நீடித்த அரசியல் வம்சத்தின் ஒரே வாரிசாக இருக்கும் இவர், இன்று ஜப்பான் நாட்டின் தூதுவராக பொறுப்பேற்றுக் கொண்டார் இதுவரை எந்த அரசுப்பணியிலும் இல்லாத 55 வயதாகும் கரோலின் தற்போது இந்தப் பதவியைப் பெறும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகின்றார்.
nov 14 - lady kennady
இப்பொறுப்பை ஏற்பது குறித்து அவர் “ஆசியாவில் எங்கள் நாட்டின் முக்கியமான கூட்டாளி ஜப்பான். ஒரு தூதராக ஜப்பானுடனான அமெரிக்காவின் நல்லுறவை மேலும் மேம்படுத்துவேன். இரு நாடுகளுக்கு இடையிலான ராஜாங்கரீதியிலான உறவுகளும், வர்த்தக நடவடிக்கைகளும் தொடர்ந்து மேம்பட பாடுபடுவேன்”
என்றார்.

Caroline Kennedy Sworn In As U.S. Ambassador To Japan
****************************************************************************
Caroline Kennedy, the daughter of slain President John F. Kennedy, has been sworn in as U.S. ambassador to Japan.Secretary of State John Kerry hosted a swearing-in ceremony Tuesday afternoon at the State Department and is to make remarks later at a reception at the Japanese ambassador’s residence in Washington.