October 16, 2021

அறிமுக படம் தொடங்கி நடித்த படங்களில் எல்லாம் காமெடியையும், சந்தானத்தையும் மட்டுமே நம்பி களம் இறங்கி ஹீரோவாக வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக தனியாக காகா மெடியை தவிர்த்து ஆக்ஷனில் கால் பதித்திருக்கிற படம் ‘கெத்து’. இந்த பெயர் யாருக்கு பொருந்துகிறது என்பதை விமர்சன முடிவில் தெரிந்து கொள்ளலாம்.

gethu jan 15

கதைப்படி மலையில் உள்ள ஒரு பள்ளியில் விளையாட்டு வாத்தியார் சத்யராஜ். இவருடைய மகன் தான் உதயநிதி. இவர் ராஜேஷ் நடத்தும் புத்தக நிலையத்தில் வேலை செய்கிறார். ஹீரோயின் எமி ஜாக்சன் கல்லூரி மாணவி. உதயநிதி வேலை பார்க்கும் புத்தக நிலையத்திற்கு அடிக்கடி வந்து புத்தகங் களை லவட்டிக் கொண்டு செல்லும் பழக்கம் உடையவர். ஒரு சாதாரண விளையாட்டு வாத்தியாராக இருந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை உள்ளவர் சத்யராஜ். இவர் வேலை பார்க்கும் பள்ளிக்கு அருகில் மதுக்கடை திறக்கப்படுகிறது. அங்கே குடித்து விட்டு பள்ளி மைதானத்தில் அரைகுறையான ஆடைகளுடன் ஆட்கள் விழுந்து கிடப்பதால் அதை சத்யராஜ் போய் தட்டிக் கேட்கிறார்.ஆத்திரம் அடையும் வில்லன் கோஷ்டி சத்யராஜ் இல்லாத நேரம் அவர் வீட்டை பூட்டி சாவியை பாரில் வந்து வாங்கிக் கொள்ள சொல்கிறது. பாரில் சாவி கேட்க போகும் சத்யராஜை வில்லன் கோஷ்டி அடித்து துவைக்கிறது. கீழே விழப்போகும் அப்பா சத்யராஜை தாங்கிப்பிடிக்கிறான் மகன் உதயநிதி.

வில்லன்களோடு மோத வேண்டாம் என சத்யராஜ் தடுத்தும் உதயநிதி அடித்து அதகளப் படுத்துகிறார். இந்த சண்டையில் சத்யராஜின் மோதிரம் அந்த பாரில் விழுந்து விடுகிறது. கடைசியில் அடிவாங்கிய வில்லனை பார்த்து ‘இனிமே இங்க பார் நடத்துன கொன்னுடு வேன்’ என்று சும்மா மிரட்டலுக்கு சத்யராஜ் சொல்லும் டயலாக் பின்னாடி அவருக்கே வம்பாக முடிகிறது.

பார் நடத்திய வில்லன் திடீரென கொல்லப்பட அவன் கையில் சத்யராஜ் மோதிரம் இருக்க சத்யராஜ் கைது செய்யப்படுகிறார். பெயிலில் எடுக்க கோர்ட்டுக்கு வரும் சத்ய ராஜை கொல்ல முயற்சி நடக்கிறது. அதை தடுத்து உதயநிதி சண்டை போடுகிறார். கொலை குற்றம் சுமத்தப்பட்டதால் அரசு பணியில் இருந்து சஸ்பெண்ட் ஆகிறார் சத்ய ராஜ். கொலையாளி யார் என போலீஸ் நண்பன் கருணா கரன் உதவியோடு கண்டுபிடிக்க உதயநிதி முயற்சிக்கிறார். அந்த சூழலில் கல்லறை காவலாளி செத்துப் போகிறார். உதயநிதி வேலை பார்த்த புத்தக நிலையத்தை நடத்திய ராஜேஷ் திடீரென கொல்லப்படுகிறார்.

இந்த கொலைகளுக்கு பின்னணி என்ன? இந்த கொலைகள் எதற்கு நடக்கிறது? கொலைப் பழியில் இருந்து சத்யராஜ் வெளியே வந்தாரா? உதயநிதியும் எமியும் காதலித்தார்களா? என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் திருக்குமரன்.

ஹீரோ உதயநிதி ஸ்டாலின் ஆக்ஷனில் ஜெயிக்க வேண்டும் என்றே பல மெனக்கெடல் நடக்கிறது. அதெல்லாம் வேணாம் உதயா வழக்கம்போல காமெடியும், கதை நாயக னாவும் மட்டும் இருங்க. கதாநாயகனா பறந்து பறந்து அடிக்கணும்னு ஆசை பட்டா உங்க கெத்து வெத்தா போயிடும் பாத்துகுங்க.

விக்ராந்த் வில்லனாக… முடியலீங்க… மூஞ்ச மறைச்சி கண்கள் மட்டும் தெரியும்படி ஒரு சீனல வரும் வில்லனை மட்டும் ஏத்துக்கலாம். மத்தபடி விக்ராந்த் வில்லன் வேஷத் துக்கு சரிபட்டு வரமாட்டாருங்க… சும்மாவே மூஞ்ச உம்முனு வைச்சிக்கிறது… டயலாக் எதுவும் இல்லாம ஓடிகிட்டே இருக்குறது. கண்ணை உருட்டி உருட்டி பாக்குறது மட்டும் வில்லத்தனம்னு யார் சொல்லிக் குடுத்தாங்கன்னு தெரியல. வில்லன்னு சொல்லிட்டு வெட்டியா வந்துட்டு போறாரு…

ஒரு சீன்ல வந்தாலும் அனுராதா வில்லிதான். கொட்டுற மழையில புடிச்சிகிட்டிருந்த குடையை வீசிட்டு ‘குத்துடா அவனை’ன்னு கத்திய தூக்கிகிட்டு ஓடி வர்ற அனுராதா வெத்தலையை துப்பி வில்லியா பதிவு பண்ணிகிட்டாங்க…

அழகான எமிஜாக்சன் கல்லூரி பெண்ணா வந்தாலும் யாருக்கும் தெரியாம புத்தகம் திருடுற ஸ்டைல் புதுசாதான் இருக்கு. நடிக்கிறத விட பாட்டுல தயாரிப்பாளருக்கு காஸ்டியூம் செலவே வைக்காம பாதி மூடியும் மீதி திறந்தும் கண்ணுக்கு குளிர்ச்சியா நடிச்சிருக்கு. பாட்டுலயும், வசனத்துலயும் லிப் சிங்க் அவ்ளோ பொறுத்தமா இருக்கு. தமிழ் தெரியாம தமிழ் பேசி, பாடி நடிச்சத பாத்தா எமிக்கு தனி கெத்து இருக்கு…

சத்யராஜ் வழக்கம்போல கண்டிப்பான நேர்மையான அப்பாவுக்கு சரியாக இருக்கார். ஒரு சராசரி பள்ளிக்கூட வாத்தியார் எப்படியிருக்கணும்னு நினைக்கிறீங்களோ அதுக்கு சத்யராஜ் சரியா இருக்கார். பெருசா இல்லனாலும் அவர் கெத்து படத்துல எங்கயும் குறையல.

ஹீரோவுக்கு நண்பனா வரும் கருணாகரன் போட்டிருக்கிறது என்னமோ போலீஸ் வேஷம்தான். ஆனா சிஐடி ஆபீசர் ரேஞ்சுக்கு கொலையாளிய கண்டுபிடிக்க மெனக் கெடுறார்.

படத்துல ஹாரீஸ் இசையில பாடல்கள் ரசிக்கும் ரகம். அதே நேரம் பின்னணி இசையில தேவையில் லாம சத்தம் அதிகமாகி பல இடங்களில் வில்லனையும் தெறிக்க வைக்கி றது. அப்ப ஹீரோவோட நிலைமையை யோசிங்க. இசையில கெத்து குறையுதுன்னு யாராவது சொன்னா அதுக்கு பெரும் காரணம் பின்னணி இசைதான்.

இயக்குனர் திருக்குமரன் எடுத்த லைன் என்னமோ சரிதான். அதுக்காக உலகத்தையே தமிழகம் பக்கம் திரும்பி பாக்க வைச்ச அப்துல்கலாம் பேரை உல்டா பண்ணி ஒருத்தரை அப்துல்கமால் ஆக்கி அவர் எழுதியதா அக்னிஇறகுகள் புத்தகம் காட்டி சயின்டிஸ்ட் ஆக்கி அவரை கொல்ல வில்லனையும் ஏற்பாடு பண்ணி… நல்ல வேளை அப்துல்கலாம் இல்ல இப்ப…

படத்துக்கு ‘கெத்து’ அப்படின்னு பேர் வைச்சிருக்கீங்க. ஹீரோ உதயநிதிக்கோ, சத்ய ராஜூக்கோ, வில்லன் விக்ராந்த்துக்கோ இந்த பேர் பொருந்தவே இல்ல. ஆனா, இந்த பேருக்கு ரொம்ப பொருத்தம் கேமராமேன் சுகுமாருக்குதான். காட்சிகளில் என்னமா மிரட்டியிருக்காரு. பசுமையான பள்ளத்தாக்கு, சுழலும் அருவி, வழுக்கும் பாறையில் ஹீரோ ஹீரோயின் காதல், காலை பனியில் எல்லையோற மலை கிராமம், பாடல் காட்சிகளில் பரந்து விரிந்த பசுமை காட்சிகள் என ‘கெத்து’ காட்டுகிறது சுகுமாரின் கேமரா.

பொங்கல் ரேசில் புறப்பட்ட படங்களில் தட்டுதடுமாறியாவது மலையேறி ‘கெத்து’ காட்டும் என நம்பலாம்..!

கோடங்கி