September 23, 2021

கூலிங் கிளாஸுடன் பிரதமரை வெல்கம் சொன்ன கலெக்டருக்கு வார்னிங் நோட்டீஸ்!

பிரதமர் மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக கடந்த 9-ம் தேதி சத்தீஷ்கார் மாநிலம் சென்றார். பஸ்தார் பிராந்தியத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரி அமித் காதாரியா கருப்பு கண்ணாடி அணிந்து இருந்தது தொடர்பாக பதில்அளிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சத்தீஷ்கார் மாநில பாரதீய ஜனதா அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ias may 15a
அந்த நோட்டீசில், “பஸ்தார் மாவட்ட ஆட்சியராக நீங்கள் அன்று பிரதமரை ஜக்தால்பூரில் வரவேற்றீர்கள். ஆனால், நீங்கள் முறையான உடைகளை அணியவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டதோடு, கூலிங் கிளாஸ் அணிந்தபடியே அவரை வரவேற்றுள்ளீர்கள். எனவே, இத்தகைய தவறான அணுகுமுறையை இனி கடைபிடிக்க வேண்டாம் என்று மாநில அரசு உங்களை எச்சரிக்கிறது. நீங்கள் செய்தது அரசு ஊழியருக்குரிய நடத்தை விதிகளுக்கு புறம்பாக அமைந்துள்ளது. அரசு ஊழியர்கள், குறிப்பாக சேவைத்துறையில் பணியாற்றுபவர்கள் நேர்மையையும், கடமை உணர்வையும் பராமரிப்பது அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது