September 26, 2021

கூடங்குளம் குறித்த முதல்வரின் கடிதத்தை வரவேற்கிறோம்! – சுப உதயகுமார் ஹேப்பி

கூடங்ளம் அணு உலை எதிர்ப்புக் குழு பொறுப்பாளர் சுப். உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் ,”கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலிரண்டு அலகுகள் தொடர்பாக தமிழக முதல்வர் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வரவேற் கிறது. ஆனாலும் தரமற்ற உபகரணங்களை, உதிரிப் பாகங்களை பயன்படுத்தியிருக்கும், ஆபத் தான இந்த அணுமின் உலைகளை உடனடியாக இயக்க வற்புறுத்துவது மக்களுக்குப் பெரும் தீங்குகளை விளைவிக்கும் என்று அஞ்சுகிறோம். எனவே தமிழக முதல்வர் கூடங்குளம் அணுமின் நிலையங்களின் உண்மை நிலை என்ன, அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றியெல்லாம் ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற வேண்டும் என்றும், இந்நிலையில் அங்கே மேலும் அணுஉலைகள் கட்டக் கூடாது என்று வலியுறுத்த வேண்டுமென்றும் தமிழக முதல்வரை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
koodan oct 8
கூடங்குளம் அணுமின் நிலையங்களுக்கு சியோ பொடால்ஸ்க் (Zio Podolsk) போன்ற மோசடி நிறுவனங்களிடம் இருந்து தரமற்ற உபகரணங்கள் வாங்கப்பட்டிருகின்றன; கூடங்குளம் அணுஉலைகளில் மிகப் பெரும் மோசடிகள் நடந்திருக்கின்றன; எனவேதான் நீராவி தயாரிப்பான் (Steam Generator), டர்பைன் போன்ற பாகங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று ஆரம்பம் முதலே நாங்கள் சொல்லி வருகிறோம். இந்த உலைகளின் உண்மை நிலை குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகிறோம். ஆனால் மத்திய அரசும், அதன் அணுசக்தித் துறையும், இந்திய அணுமின் கழகமும் கள்ள மெளனம் சாதித்து வருகின்றன. இந்தப் பிரச்சினை குறித்து இதுவரை எதுவும் பேசாதிருந்த தமிழக முதல்வர் எங்களின் கோரிக்கைகளை இலைமறைக் காய்மறையாக வலியுறுத்தியிருப்பதாகவே முதல்வரின் கடிதத்தை நாங்கள் பார்க்கிறோம்.

கூடங்குளம் அணுஉலை அக்டோபர் 22, 2013 அன்று மின்தொகுப்பில் இணைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் டிசம்பர் 31, 2௦14 அன்று வணிக ரீதியிலான மின்உற்பத்தி துவங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டது. மே 31, 2௦15 வரையிலான 586 நாட்களில் அணுஉலை 226 நாட்கள் ஓடவில்லை. மொத்தம் 64 நாட்கள் அணுஉலை பராமரிப்புக்காக மூடப்பட்டது. டர்பைனில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காகவும், டர்பைனை மாற்றுவதற்காகவும் உலை 72 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டது. மேலும் 15 முறை அணுஉலை தடைபட்டு மொத்தம் 9௦ நாட்கள் மூடிவைக்கப்பட வேண்டியதாயிற்று.

இந்தாண்டு ஜனவரி 1 முதல் மே 31 வரை, அணுஉலை இரண்டு முறை பலவந்தமாக மூடப் பட்டது. பொங்கலன்று (ஜனவரி 14, 2015) மூடப்பட்ட உலை நான்கு நாட்கள் செயலிழந்து கிடந்தது. ஏப்ரல் 2௦ முதல் முனகிக்கொண்டிருந்த அணுஉலை மே 9 அன்று மாலை 6:3௦ மணிக்கு மீண்டும் பலவந்தமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மே 14 அன்று அதிகாலை 4:47 மணிக்கு மீண்டும் ஓடத் துவங்கியது. அன்றிலிருந்து அணுஉலை வெறும் 55 விழுக்காடு மின்சாரம் மட்டுமே தயாரித் ததாகச் சொன்னார்கள். இந்த நிலையில் மே 19 அன்று அணுசக்தித் துறை செயலாளர் முதல் அணுஉலையின் டர்பைன் பாகங்கள் சில புதிதாக தயாரிக்கப்பட்டு வருவதாக அறிவித்தார். கூடங் குளம் அணுமின் நிர்வாகத்தினர் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள டீசலை வாங்கியதும் இங்கேக் குறிப்பிடத்தக்கது.

மே 21, 2௦15 அன்று கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் அணுஉலை வெறும் 6௦௦ மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்வதாகவும், அணுஉலை வருடாந்திர பராமரிப்புக்காக இரண்டு மாதங்கள் மூடப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி யூன் 24, 2௦15 அன்று அணுஉலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 12 அன்று அணுஉலையில் எரிகோல்களை அகற்றும் பணி முடியாததால், மின் உற்பத்தி மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என்று அறிவித்தார் வளாக இயக்குனர். மிக முக்கியமான அந்த வேலையைக்கூட இவர்களால் முன்கூட்டியே சிந்தித்துப் பார்க்கவோ, செயல்திட்டம் வகுத்துப் பணியாற்றவோ முடியவில்லை.

கடுகளவும் பொறுப்பின்றி சிறுபிள்ளைத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் கூடங்குளம் அதிகாரிகள்.கூடங்குளம் முதல் அலகில் பல பாகங்கள் சரியாக வேலை செய்யவில்லை; கூடங்குளம் திட்டத்தில் மிகப் பெரும் ஊழல்கள் நடந்திருக்கின்றன; கூடங்குளம் அணுஉலைகள் பாதுகாப் பானவை அல்ல. இரண்டாவது அணுமின் நிலையத்தில் 96 விழுக்காடு வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் 2௦14 யூன் மாதம் மின் உற்பத்தி துவங்கும் என்று அறிவித்தார்கள். ஆனால் இன்று வரை அங்கே எதுவும் நடந்தபாடில்லை. இந்த லட்சணத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது மன்மோகன் சிங் அரசு 3, 4 அணுஉலைகளுக்கு ரூ. 45,௦௦௦ கோடி என விலை நிர்ணயித்து அவசரம் அவசரமாக ஒப்பந்தம் கையெழுத்திட்டு ரஷ்யர்களை மகிழ்வித்தது. இந்த வேலைகளைத் துவங்குவதில் அணுசக்தித் துறை ஆர்வமாயிருக்கிறது.

ஆபத்தான நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கூடங்குளம் அணுமின் திட்டத்தில் கூடுதல் அணுமின் நிலையங்கள் கட்டுவது தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். எனவே அணுஉலை விரிவாக்கத் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.

கூடங்குளம் அணுமின் திட்டம் எனும் மாபெரும் ஆபத்திலிருந்து தமிழர்களை காக்க வேண்டியது அ.தி.மு.க. அரசின் மிகப் பெரும் பொறுப்பாக இருக்கிறது. இந்தப் பிரச்சினையில் தமிழகத்தின் இன்னொரு பெரிய கட்சியான தி.மு.க. கள்ள மவுனம் சாதிப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்(தொடர்புக்கு: சுப. உதயகுமார், ஒருங்கிணைப்பாளர், 9865683735)” என்று தெரிவித்துள்ளார்