October 25, 2021

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்! – ரஷ்யாவில் கையெழுத்தாகிறது

ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் கூடங்குளத்தில் இப்போது 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி தொடங்க உள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் வரும் திங்கட்கிழமை ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசுகிறார். அப்போது, கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைப்பது தொடர்பாக இந்தியா , ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
18 = - koodankulam
அணு உலை விபத்து இழப்பீடு சட்டம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே சில அம்சங்களில் கருத்து வேறுபாடு உள்ளது. பிரதமரின் ரஷ்ய பயணத்துக்கு முன் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் இரு நாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். ரஷ்ய பயணத்தை முடித்து கொண்டு சீனாவுக்கும் மன்மோகன் சிங் செல்கிறார்.

India, Russia to sign pacts on Kudankulam III, IV reactors
*************************************************************
India and Russia are involved in talks to sort out the nuclear liability issues before they sign an agreement for setting up units III and IV of the Kudankulam power plant in Tamil Nadu during Prime Minister Manmohan Singh’s annual summit with Russian President Vladimir Putin in Moscow next week.