September 24, 2021

கூகுளின் கரடி பொம்மைகள் மூலம் குழந்தைகளை வேவு பார்க்கலாம்! வீடியோ

குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். பெற்றோர் தான் அவர்களின் முதன்மையான வழிகாட்டி. குழந்தைகள் பெற்றோரின் நடவடிக்கைகளை, பழக்க வழக்கங்களை கவனித்து, அந்த பண்பு நலன்களை நினைவில் கொள்கின்றனர். ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மையான மதிநுட்பமும், புதிய சாதனைகளைப் படைக்கும் தன்மையும் கொண்டவராக உள்ளது. இந்நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் வேவு பார்க்க உதவும் கரடி வடிவிலான விளையாட்டுப் பொம்மைகளை கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
google spy
கூகுள் மேட் அறிவியல் எக்ஸ் டிவிசன் குழந்தைகள் பயன்படுத்தும் கரடி, முயல் பொம்மைகள் போல, பல்வேறு வடிவங்களில் உள்ள விளையாட்டுப் பொம்மைகளின் கண்களில் அதிநவீன கேமராக்கள், காதில் ஒலி வாங்கிகள், வாய் பகுதியில் ஒலிபெருக்கிகள், உடலில் மோட்டார்கள் உள்ளிட்டவற்றைப் பொருத்தி, அவற்றின் மூலம் திரட்டும் தகவல்கள் இணையதளத்தில் இணைக்கப்படும்.

இதன் மூலம், அந்த பொம்மை உள்ள இடத்தை அதன் உரிமையாளர் தொடர்ந்து வேவு பார்க்க முடியும். மேலும் வீட்டில் இருக்கும் டி.வி. போன்ற மின் சாதனங்களை இயக்கவும் முடியும். செல்போன்கள் மூலம் அந்த பொம்மைக்கு கட்டளைகள் இடவும் முடியும்.இன்னும் முழுமை பெறாத இந்த புதிய விளையாட்டுப் பொம்மைகளுக்கான காப்புரிமையை அந்த நிறுவனம் சமீபத்தில் பெற்றுள்ளது.