October 25, 2021

“குழந்தை பெத்துக்காதீங்க!” – கொசு பரப்பும் வைரஸை கண்டு அலறும் அமெரிக்கா

சமீபகாலமாக தென் அமெரிக்காவில் கொசுக்களால் கொடிய ‘சிகா’ வைரஸ் பரவுகிறது.’சிகா’ வைரஸ் பச்சிளம் குழந்தைகளை, குறைபாடு உள்ள குழந்தைகளாக மாற்றிவிடுகிறது. சிகா வைரஸ் என்பது டெங்கு வைரஸுக்கு இணையானது. இதுவும் கொசுக்கடியால் பரவுவது. காய்ச்சல், தடிப்பு, மூட்டுவலி உள்ளிட்டவை இதன் அறிகுறிகள். ஆனால், டெங்குவை விடவும் கொடியது. ஏனென்றால், ஒட்டு மொத்தமாக மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது. வெளி உலகுக்குள் முதன்முதலாகப் பிரவே சிக்கும் ஒரு சிசு எப்படி இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது? அம்மா கர்ப்பிணியாக இருந்தபோது கொசு கடித்ததால் ரத்த நாளங்கள் வழியாக நேரடியாக அவருடைய கருவில் இருந்த குழந்தையைத் தாக்கியிருக்கிறது சிகா வைரஸ்.
virus jan 25

கடந்த மே மாதம் தொடங்கி கொலம்பியா முதல் மெக்சிகோ வரை 14 நாடுகளில் சிகா பரவியுள்ளது. இதுவரை இதற்கான மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இது தொற்றுநோய் கிடையாது என்பது மட்டும் இப்போதைக்கு ஆறுதல்! இதற்கிடையில்தான் பிரேசில், கொலம்பியா, எல்-சல்வடோர் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் வைரஸ் பரவலால் பெரிதும் அச்சம் நிலவி வரு கிறது. ‘சிகா’ வைரஸ் தாக்கத்தால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக் குறைபாடு நிகழ்கிறது என்பது மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து அங்கு வைரஸ் பரவலை தடுப்பதற்கு தென் அமெரிக்க நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுலா வரும் பயணிகளுக்கும் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு உள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்-சல்வடோர் அரசு பெண்கள் யாரும் அடுத்த 2 வருடங்களுக்கு மேலாக கருத்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு உள்ளது.

2015- மே மாதம் பிரேசிலில் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களில் சிறு தலையுடன் சுமார் 4000 ஆயிரம் குழந்தைகள் பிறந்ததற்கு ‘சிகா’ வைரஸ் பாதிப்பே காரணம் என்று அதிகாரிகள் அறிக்கை பெற்று உள்ளனர். குழந்தைகளின் நிலையானது மிகவும் வழகத்திற்கு மாறாகவே உள்ளது. முழுவதும் வளர்ச்சியடையாத மூளையுடன் குழந்தைகள் பிறக்கிறது. பிரேசில் எல்லையில் உள்ள கொலம்பியாவிலும் வைரஸ் பரவிஉள்ளது. அங்கும் 13,000 த்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அங்கும் சில மாதங்களுக்கு பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.இதேபோன்று, ஜமைக்கா, ஹண்டுராஸ் ஆகிய நாடுகளிலும் பெண்கள் கர்ப்பம் தரிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.