September 27, 2021

குழந்தையின் டெம்ப்ரேச்சரை கண்காணித்துச் சொல்லும் டெக்னாலஜி!

குழந்தைகளை வளர்ப்பது ஒரு தனிக்கலை. அதுவும் பிறந்த முதல் இரண்டு வருடம் மிகவும் பாதுக்காப்பாக வளர்க்க வேண்டியது என்பது எல்லா பெற்றோருக்கும் ஒரு பெரிய பொறுப்பாகும். குழந்தைகளுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை காய்ச்சல் என்னும் ஜுரம் அடிக்கடி வரும் அபாயம் இருக்கும் காலகட்டத்தில் இதை கன்டறிவது மிகவும் கஷ்டம். சிலர் உடம்பு கொஞ்சம் சூடானாலும் குழம்புவார்கள் அடிக்கடி டாக்டர்களிடம் சென்றுதான் குழந்தைக்கு காய்ச்சலா இல்லையா என உறுதி செய்வார்கள். இனிமேல் அதற்க்கும் ஒரு டெக்னாலஜி வந்துவிட்டது.
ravi dec 8
அதாவது குழந்தையின் வாயில் வைக்கும் நிப்பிள் என்னும் ரப்பர் உள்ளே ஒரு சிறப்பு தெர்மோஸ்டாட்டை வைத்து அதன் மூலம் குழந்தையின் உஷ்னத்தை தாய் மற்றும் தந்தை மொபைல் மூலம் கண்கானிக்க முடியும். இந்த ஜுரமா இல்லையான்னு அந்த தெர்மோஸ்டாட் கன்டறிந்து அதனை ப்ளூ டுத் மூலம் மொபைலுக்கு அனுப்பும் இதன் விலை 2000 ரூபாய்கள் தான். இதன் மூலம் உங்கள் குழந்தையின் சாதாரண பாடி டெம்ப்ரச்சேரை தொடர்ந்து அறிந்து கொள்ளவும் முடியும்.

Amazing Invention for Infants