June 16, 2021

குழந்தைகள் தொடர்ந்து டி.வி.,பார்த்தால் ரத்தகொதிப்பு அதிகரிக்கும்!

பெரும்பாலான பெண்கள் அதிக நேரம் உட்கார்ந்த நிலையிலே “டிவி’ நிகழ்ச்சிகளை பார்ப்பதால், இன்சுலின் சமச்சீரின்மை ஏற்படுகிறது.இது சர்க்கரை நோய் உருவாக காரணமாகிறது. கொழுப்பைக் கரைக்கும் என்சைம் உற்பத்தி குறைகிறது. தினமும் 5 மணிநேரத்திற்கு மேல் “டிவி’ பார்ப்பவர்களுக்கு, 5 ஆண்டுகள் ஆயுள் குறையும் என்று ஒரு ஆய்வு தெரிவித்திருந்தது.வாரத்துக்கு 20 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து டி.வி.பார்க்கும் ஆண்களின் உயிரணு எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் அவர்கள் குழந்தை பெறும் வாய்ப்பை இழந்து வருவதும் முன்னர் நடத்திய மற்றோரு ஆய்வு ஒன்றில் தெரிந்தது.

இந்நிலையில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகள் டி.வி.,பார்த்தால் அவர்களுக்கு ரத்தகொதிப்பு அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வில் t v watch child

கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து பிரேசில் ஆய்வாளர் அகஸ்டோ சீஸர் எப்.டி. மோராயஸ்,” ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளான ஸ்பெயின் ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி, சைப்ரஸ், ஸ்வீடன் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து 2 வயது முதல் 10 வயது குழந்தைகளான 5 ஆயிரத்து 221 பேர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக குழந்தைகளை அவர்களுக்கு பிடித்த சேனல்களை பார்க்க வைத்து சோதனை நடத்தப்பட்டது.

இதில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக டி.வி., சேனல்களை பார்த்து வந்த குழந்தைகளில் அனேகம் பேருக்கு 30 சதவீதம் அளவிற்கு ரத்த கொதிப்பு அதிகரித்துள்ளது நிரூபணமாகி இருக்கிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு குழந்தைகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக டி. வி.,பார்க்க அனுமதிக்க கூடாது” என தெரிவித்துள்ளார்