August 12, 2022

குழந்தைகளை பாதிக்கும் கவன பற்றாக்குறையும் ,அதீத துறு துறுப்பும சில விஷயங்கள்!

இந்த கவன பற்றாக்குறை (ADHD) மிகவும் பொதுவான சிறுவயது கோளாறுகளில் ஒன்றாகும் குறிப்பாக ஆண் குழந்தைகள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள். வளர்ந்து பெரியவர்களானாலும் இதனால் அவர்கள் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.பெரும்பாலும் போதிய சத்துணவு இல்லாததாலும், விஷப்பொருட்கள், பதனப்பொருட்கள், யைம்(lead), , பாதரசம்( Mercury) போன்ற கன உலோக தாதுக்கள் உண்பதாலும் அடிக்கடி ஆன்டி பயாட்டிக் எடுத்துக் கொள்வதாலும் குழந்தைகளுக்கு இது போன்ற பிரச்னைADHD வரும்.தவறான வளர்ப்பு முறையால் இது வருவதல்ல . ஆனால் சரியான வளர்ப்பு முறை அதை மேலும் மோசமாகாமல் பாது காக்கும்.
sep 22 - health ADHD
1.கவனமின்மை அறிகுறிகள் (inattention)

நாம் சொல்லுவதை ஒழுங்காக கேட்டு அதன் படி நடக்க மாட்டார்கள்.

வகுப்பில் பாடங்களை கவனிப்பதிலும் ,வேலை செய்யும் போதும் விளையாடும் போதும் அவர்கள் கவனம் நிலத்திருக்காது.

பள்ளிக் கூடத்தில் பென்சில்,பேனா, ரப்பர்,ஸ்கேல் என்று நாளும் தொலைத்து விட்டு வருவார்கள்.

ஏதாவது சொன்னால் மண்டையில் ஏறாதது போல் நிற்பார்கள்.

நுட்பமான விபரங்களை தெரிந்து கொள்ளவோ தெளிவாக விளங்கிக் கொள்ளவோ ஆர்வமிருக்காது.

நன்றாக யோசித்து செய்ய வேண்டிய செயல்களை செய்வதற்கு சிரமப்படுவார்கள்.

செயல்பாடுகளில் ஒரு ஒழுங்கு இருக்காது.

ஞாபக மறதி அதிகம் இருக்கும்.

2.அதீத துறு துறுப்பு அறிகுறிகள் ( hyperactivity)

எப்போதும் துறு துறுவென்று இருப்பார்கள்

ஓடுவது,குதிப்பது,மரங்களில் ஏறுவது என்று எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்.

அமைதியாக விளையாடமாட்டார்கள்.

முந்திரிக் கொட்டை போல் பதில் சொவார்கள்

பிறருக்கு தொல்லைகள் தருவார்கள்

ஒரே இடத்தில் கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார மாட்டார்கள்.

3.மனக்கிளர்ச்சி அறிகுறிகள் (Impulsivity )

அதிகம் பேசுவார்கள்.

தன் முறை வரும் வரை பொறுமை காக்க மாட்டார்கள்.

யோசிக்காமல் செயல் படுவார்கள்.ஆபத்தாக செயல் படுவார்கள்

கவனமின்றி சாலையை கடப்பார்கள் .

யோசிக்காமல் சட்டென எதையாவது கூறி விடுவது.

கவனம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.

சிலவற்றை செய்ய அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்

பயம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது.

ADHD ல் மூன்று உட்பிரிவுகள் உள்ளன:

1 பெரும்பாலும் இயற்கை மீறிய சுறுசுறுப்பு, மனக்கிளர்ச்சி—Predominantly hyperactive-impulsive)
பெரும்பாலான அறிகுறிகள் (ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட) இயக்கம்-திடீர் உணர்ச்சிக்கு பிரிவுகள் உள்ளன.
கவனமின்மை இன்னும் ஓரளவிற்கு இருக்கலாம் என்றாலும் கவனமின்மை ஆறு அறிகுறிகளை விட குறைவக உள்ளது

2.மேலோங்கிய கவனமின்மை( Predominantly inattentive)
அறிகுறிகள் பெரும்பாலான (ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட) கவனமின்மை வகை உள்ளன மற்றும் இயக்கம்-திடீர் உணர்ச்சிக்கு இன்னும் ஓரளவிற்கு இருக்கலாம் எனினும் அதிகப்படியான-திடீர் உணர்ச்சிக்கு குறைவான ஆறு அறிகுறிகள், உள்ளது.

3.மிகையான இயக்கம்-மனக்கிளர்ச்சி மற்றும் கவனக்குறைவான ஒருங்கிணைந்த(Combined hyperactive-impulsive and inattentive)கவனமின்மை மற்றும் இயக்கம்-திடீர் உணர்ச்சிக்கு ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் O ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் உள்ளன.

O பெரும்பாலான குழந்தைகள் ADHD கூட்டு வகை உண்டு.

காரணங்கள்

• விஞ்ஞானிகளின் பல ஆய்வுகள் படி மூளையில் சிந்தனையை நிர்வாகிக்கும் பகுதியில் சில இடங்களில் போதுமான ரசாயன மாற்றங்கள் சரியாக நடைபெறாததே இதற்கு காரணம். ADHD உள்ள சிலரை Brain Scan செய்து பார்த்த போது frontal lobe செயல் பாடு குறைவாக இருப்பது தெரிந்தது.

திட்டமிடுதல் , ஒழுங்கு படுத்துதல், கவனித்தல், போன்றவற்றிற்கு frontal lobe ன் செயல் பாடுதான் காரணம்.
நெருங்கிய உறவினர்களுக்கு ADHD இருந்தாலும் பிள்ளைகளுக்கு வர அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

கர்ப்பிணிகள் புகை பிடிப்பதாலும், புகை பிடிக்கும் கணவன் அருகிலிருந்தாலும் பிறக்கும் குழந்தை ADHDயுடன் பிறக்க காரணமாகலாம் என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.

கருவுற்ற தாய்மார்கள் போதிய சத்துணவு உண்ணாவிட்டாலும், பிரசவ நேரத்தில் சிக்கல் இருந்தாலும் பிறக்கும் குழந்தை ADHDயுடன் பிறக்கலாம்.

போதிய சத்துணவு இல்லாததாலும், விஷப்பொருட்கள், பதனப்பொருட்கள், யைம்(lead), , பாதரசம்( Mercury) போன்ற கன உலோக தாதுக்கள் உண்பதாலும் அடிக்கடி ஆன்டி பயாட்டிக் எடுத்துக் கொள்வதாலும் குழந்தைகளுக்கு ADHD வரும்.
தவறான வளர்ப்பு முறையால் இது வருவதல்ல . ஆனால் சரியான வளர்ப்பு முறை அதை மேலும் மோசமாகாமல் பாது காக்கும்.

• மூளை காயங்கள்.

• சர்க்கரை. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ADHD ஏற்படுகிறது அல்லது அறிகுறிகள் மோசமாக உள்ளது என்று கருத் து ு ,உள்ளது+மருந்துகள்ADHD சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பொதுவான வகை ஒரு “ஊக்கி.” என்று அழைக்கப்படுகிறது இது ஒரு ஊக்கியாக கருதப்படும் ஒரு மருந்துகள் மூலம் ADHD சிகிச்சை அசாதாரண போல் தோன்றலாம் என்றாலும், அது உண்மையில் ADHD குழந்தைகள் ஒரு அடக்கும் விளைவை கொண்டிருக்கிறது

மேல் கண்ட குறைபாடுடைய குழந்தைகளுக்கு ADHD இருக்கிறதா என ஒரு மனோ தத்துவ மருத்துவர் உதவியுடன் கண்டறிய வேண்டும். கண்பார்வை குறைவு , காது கேளாமை போன்ற வேறு காரணங்கள் இருக்கிறதா? என்றும் ஆராயப்பட வேண்டும்.
குறைப்பாடுள்ள குழந்தைகளை குற்றம் சாட்டுவது தண்டிப்பதும் கூடாது. சில குழந்தகளுக்கு நல்ல மனோ தத்துவ ஆலோசனை தேவைப்படலாம். அல்லது மருத்துவ சிகிட்சை தேவைப்படும். psychostimulant மருந்துகள் பயன் படுத்துவது நோய்குறியை மிதப்படுத்தினாலும் நோயை குணப்படுத்துவதில்லை. மேலும் பக்க விளைவுகளும் ஏற்படுத்தக்கூடியது.
பொதுவாக ADHDக்கு methylphenidate,dextroamphetamine ,pemoline,atomoxetine,Adderall போன்ற மருந்துகளை மருத்துவர் பரிந்துரைத்தால் பயன் படுத்தலாம்.

மருந்துகள் பக்க விளைவுகள் என்ன?

பொதுவாக ADHD மருந்துகளின் பக்க விளைவுகள்- பசியின்மை, தூக்கமின்மை பிரச்சினைகள், மனக்கலக்கம், மற்றும் எரிச்சல். லேசான stomachaches அல்லது தலைவலி ஏற்படுகிறது.

சிகிச்சை முறைகைள்

ஆராய்ச்சி/ ஆய்வுகள் படி உணர்வு ஒருங்கிணைப்பு(sensory integration) போன்ற தொழில் சிகிச்சையில் (occupationak therapy)மிகவும் பயனுள்ளதாக கருத படுகிறது

உடல் தசை இயக்கப் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் occupational therapy சிகிச்சை முறைகைள்
…………………..தொடரும்

DR.P.Mஅருண் குமார், M.O.T,FC-ECLD( CHILD HEALTH)
OCCUPATIONAL THERAPIST
KIDDOS REHAB CENTRE
PORUR
CHENNAI
9841544004,9840123294