October 20, 2021

குறைந்த வட்டியில் நுகர்வோர் சாதனங்களுக்கு தாராளமாக கடன்!- நிதி அமைச்சகம் உத்தரவு!!

‘டிவி, பிரிஜ்’ உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி சென்ற ஜூலையில் 9.3 சதவீதம் குறைந்துள்ளது. இந்த வளர்ச்சி சென்ற ஆண்டு இதே மாதத்தில் 0.8 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் இத்துறையின் உற்பத்தி 12 சதவீதம் குறைந்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் 6.1 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.இந்நிலையில் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், உற்பத்தி பொருட்களின் தேக்கத்தை போக்கவும், ‘டிவி, பிரிஜ், ஏ.சி., டூவீலர்’ போன்ற வற்றிற்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்குமாறு, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
4 - bank loan
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் ஆகியோரை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நேற்று சந்தித்து பேசினார். நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தேவையை பூர்த்தி செய்வதற்காக பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி முதலீட்டு நிதி அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக விரைவில் அதன் தலைவர்களை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேச உள்ளார்.இந்த ஊக்குவிப்பு முதலீட்டு நிதி மூலம் வங்கிகள் குறைந்த வட்டியில் இரு சக்கர வாகனக் கடன், வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்டவற்றுக்கான கடன்கள் உள்ளிட்டவற்றை வழங்க முடியும்.

வங்கிகளின் கடன் வழங்கும் திறனை பொருத்து எவ்வளவுக்கு எவ்வளவு வட்டியை குறைத்து வழங்க முடியுமோ, அந்த அளவுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். வங்கிகளுக்கு அளிக்கப்படும் இந்த நிதியால் நடுத்தட்டு மக்களின் தேவைகள் பூர்த்தி ஆவதுடன், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியை பெருக்கவும் உதவும். மேலும், பொருளாதார மந்தநிலையை சமாளித்து நடைபோட வங்கிகளுக்கு உதவியாக இருக்கும்.”என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Consumers to get cheaper loan for auto, consumer goods purchase

***************************************************************
Ahead of the festival season, public sector banks will provide cheaper loans for auto and consumer goods purchases with a view to stimulating demand.Banks would lower lending rates as the government on Thursday decided to provide additional funds to the PSU banks to enable them financing of auto and consumer goods purchases.