September 25, 2021

‘குரூப் – 2’ தேர்வு ஆன்சர் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பணியில் 1,064 பேரை தேர்வு செய்வதற்கான முதல் நிலை எழுத்து தேர்வு அண்மையில்  நடந்தது. இத்தேர்வுக்கு 6,64,583 பேர் அனுமதிக்கப் பட்டிருந்தனர். ஆனால் 75 சதவீதம் பேர் மட்டுமே (4,98,437 பேர்) தேர்வு எழுதினர். 1,66,146 பேர் ஆப்சென்ட்.தேர்வு முடிந்ததும் 114 ஊர்களில் 2,269 தேர்வு மையங்களில் நடந்த விடைத்தாள்கள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
dec 4 - T N P S C
இந்நிலையில்  கேள்விக்கான விடைகள், டி.என்.பி.எஸ்.சி.,  http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. ‘விடை குறித்து, ஆட்சேபனை இருந்தால், ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கலாம்’ என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. ‘அதன்பின், ஆட்சேபனை கருத்துக்கள் குறித்து, பாட வாரியான நிபுணர் குழு ஆய்வு செய்தபின், இறுதி விடை குறித்து, முடிவு எடுக்கப்படும்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 thought on “‘குரூப் – 2’ தேர்வு ஆன்சர் வெளியீடு!

Comments are closed.