December 4, 2022

குமார் வெங்கடேசன் ஆனந்த் என்ற இயற்பெயரை கொண்ட கே.வி ஆனந்த்! – சில நினைவுகள்!

ல நிகழ்ச்சிகளில் பார்த்திருந்தாலும் ஒரே ஒரு முறைதான் கை குலுக்கி அறிமுகப்பட்டுக் கொண்டு பேசி இருக்கிறோம். அதே சமயம் இருபதுக்கும் அதிகமான முறை போனில் – ஒவ்வொரு தடவையும் மினிம ஒன் அவர் பேசி இருக்கிறோம்.. நேற்றைய விஷயங்களை அலசுவதை விட நாளைய நடப்புக் குறித்து கணக்கிடுவதில் ஆர்வம் கொண்டம் அவரிடம் பல சூழலில் பேசியதில் இருந்து ஆந்தை ரிப்போர்ட்டர் டாட் -காம்-மிற்காக தொகுத்தளிக்கும் சிறப்பு அஞ்சலி ரிப்போர்ட்

கிட்டத்தட்ட 31 வருசங்களுக்கு முன்ன்னால் அதாவது 1995-ல் ரிலீசான் ‘தென்மாவின் கொம்பத்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. நாயகன் மோகன்லாலிடம் காதலை மறுத்துவிட்டு போகும் கதாநாயகி ஷோபனா, வயல்களுக்கு நடுவே நடந்து சென்று கொண்டிருப்பார். அப்பொழுது ஷோபனாவின் எண்ண ஓட்டத்தை பார்வையாளன் உணர ஆறேழு விதமான ஆங்கிள்களில் ஷோபனா நடந்து போவதை காட்டியிருப்பார் ஒளிப்பதிவாளர். மிகவும் நுட்பமான ஒளிப்பதிவை தந்த அந்த ஒளிப்பதிவாளருக்கு அதுதான் முதல் படம், அந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். அவர்தான் இன்று மறைந்து விட்டதாக செய்தியை பரப்புகிறார்கள்! ஊஹூம் இப்படி எல்லாம் சிம்பிளாக அவரை மறைக்க முடியாது.. தூய புத்தம் புது தமிழில் தன் படைப்புகளுக்கு தலைப்பு வச்சி சாதனைப் படைத்தவரின் பேர் சினிமா இருக்கும் வரை அவர் மறைய மாட்டார்

ஒரு முறை அவர் ஒளிப்பதிவு பண்ணிய படங்களில், நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு பண்ணிய படம் எது?-ன்னு ஏகப்பட்ட பேர் காட்டிருக்காங்க.. இப்ப கேள்வி கேக்கறவங்க இது ஏற்கெனவே கேட்ட கேள்வி என்பதை அறியாமலே கேட்பதை கண்டு கொள்ளாமல் பதில் சொல்லியே பழகி போச்சு.. உண்மையில் ‘முதல்வன்’படம்தான் நான் மிகவும் யோசிச்சு, மெனக்கெட்டு ஷூட் செய்தது.. ஏகப்பட்ட ட்ராக்-கில் படத்தின் கதை போகும். அதுனாலே விதவிதமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். படத்திற்கு ஒளிப்பதிவு ஸ்டைல் என்று முடிவு பண்ணுவார்கள். ‘முதல்வன்’ படத்தைப் பார்த்த நீங்க ஸ்டைல் -ன்னு எதையுமே குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஷக்கலக்கா பேபி அப்படிங்கிற பாடலை ‘க்ராஸ் புராசஸிங்’ (CROSS PROCESSING) என்ற தொழில்நுட்பத்தில் பண்ணினோம். கேமராவில் ரேம்பிங் (RAMPING) ஷாட்ஸ் நிறைய பண்ணினோம். அதிக வேக கேமராவை வைத்துக்கொண்டு, வேகமாக காட்சிகள் நகர்வதுபோல பண்ணினோம். இன்றைக்கு ஆவிட் எடிட்டிங் முறையில் இதைச் சுலபமா பண்ணலாம். ஆனால், அதை அப்போதே கேமராவில் பண்ணினேன். இந்தியாவில் முதல் முறையா ரேம்பிங் முறையில் காட்சிகள் பண்ணினது. ’முதல்வன்’ படத்தில்தான். இயக்குநர் ஷங்கர் அந்த மாதிரி விஷயங்களுக்கு நிறைய ஒத்துழைப்பு கொடுத்தார். ‘முதல்வன்’ படத்தில் இம்மாதிரி நிறைய தொழில்நுட்பங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். ஆனா அந்தப் படத்திற்கு எனக்குச் சாதாரண விருதுகூடக் கொடுக்கவில்லை. ‘விரும்புகிறேன்’, ‘நேருக்கு நேர்’ இப்படி நிறைய சின்ன படங்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் நான் ஒளிப்பதிவு பண்ணிய படங்களில், ரொம்ப ஹேப்பியும், நிறைவையும் தந்த படம் ‘முதல்வன்’.(ஆந்தை ரிப்போர்ட்டர்)

சில விஷயங்கள் ஏன் தள்ளி போகுது என்பதைக் காலமே நம்மை அழைத்து போய் நமக்கு உணர்த்தும்.. அதுக்கு ஒரு உதராணம் சொல்லட்டுமா? காலேஜ் படிச்சிக்கிட்டிருக்கும் போது, ‘ஆனந்த விகடன்’ அப்படீங்கற மேகசின் நடத்துன மாணவப் பத்திரிகையாளர் திட்டத்துக்கு அப்ளை பண்ணியிருந்தேன். முதல் ரவுண்ட்லே பாஸான என்னை அதற்கு அடுத்த சுற்றுல தேர்வும் செய்யும் வாய்ப்பு அவிய்ங்களுக்குக் கிடைக்காமப் போயிடுச்சு. அப்புறம் லயோலா காலேஜூல் விஷுவல் கம்யூனிகேஷன் டிப்ளோமா படிச்சிட்டு, பத்திரிகைகளுக்குப் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பிச்சேன். நான் எடுத்த புகைப்படங்களைப் பார்த்துட்டு ‘கல்கி’யில இருந்த சாருகேசி, ராஜேந்திரன் சார்கிட்ட என்னைக் கூட்டிக்கிட்டுப் போய். ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைக்க வழி செஞ்சார். அப்போ இளங்கோவன் -பின்னாளில் குமுதல் ரிப்போர்ட்டர் ஆசிரியரா இருந்தவர் மூலம். அட்டைப் பட கட்டுரைக்கான படமே கிட்டத்தட்ட நூற்றுக்கு மேல எடுத்திருப்பேன். தவிர, ஆயிரம் படங்கள் பிரசுரமாகியிருக்கும். அப்படி அப்படியே வந்து ஏகப்பட்ட படங்களுக்குக் கேமராமேனாகவும் வொர்க் பண்ணிய நிலையில் என்னை மேற்படி விகடன் மாணவர் பத்திரிகையாளர் கேம்புக்கு விஐபி-யாகக் கூப்பிட்டாய்ங்க” என்று சொல்லி சிரித்து விட்டு தொடர்ந்து பகிர்ந்த சம்பவத்தை இப்போது பகிர்வது சரியல்ல..

அவரிடம் ஸ்டில் போட்டோகிராபரா இருந்தவர் சினிமாவுக்கு வந்த வாய்ப்பு மற்றும் வழி குறித்து கேட்ட போது சின்ன வயதிலிருந்தே சினிமா மீது எனக்குத் தீராத காதல். இதுக்காக அடையாறு திரைப்படக் கல்லூரியில் படிக்க அணுகினேன். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. பிறகு பி.எஸ்சி. பிசிக்ஸ் படிக்கும் போது, அதில் ஒளியியல் (Optics) சம்பந்தமாக ஒரு படிப்பு இருந்தது. அதன் மூலம் ஒளிப்பதிவாளரான பிறகு லென்ஸ் எப்படிப் பணிபுரிகிறது என்பதை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள முடிஞ்சுது. அப்பாலே லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். ரெனெய்சான்ஸ் (Renaissance) ஓவியங்கள், ரவிவர்மா ஓவியங்கள் பற்றியெல்லாம் அதில் படிப்பு இருக்கும். சிற்பக்கலை, ஓவியக்கலை உள்ளிட்டவற்றைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து வைச்சிருந்தேன். நிறைய உலக சினிமாக்களைப் பார்க்கத் தொடங்கினேன். ஒளிப்படப் பத்திரிகையாளராகப் பணிபுரியும்போது சினிமா மீதான ஆர்வம் இன்னும் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகப் ஜாயிண்ட் பண்ணினேன்’ என்றார்.

பி.சி.ஸ்ரீராம் என்னும் ஆளுமை அவருக்குப்பின் ஒரு படையை தயார் செய்திருந்தது. அதன் முதன்மைத் தளபதி கே.வி.ஆனந்த். காரணம் இவர் தன குருவைப் பின்பற்றியவர் அல்ல. அவரைப்போலவே புதிய புதிய முயற்சிகளை சினிமாவில் செய்தார்.காதல் தேசம் படம் வெளியானபோது சென்னை என்னும் நகரத்தை இத்தனை தொலைநோக்கோடு படம் பிடித்திருக்கிறாரே என விமர்சகர்கள் கே.வி.ஆனந்த்தைக் கொண்டாடினர்.முதல்வன் படத்தின் பிரம்மாண்டம் கே.வி.ஆனந்தின் கைவண்ணம்தான். அந்த பிரம்மாண்டமே இயக்குனர் ஷங்கர் என்பவருக்கான அடையாளமானது. பின்னர் அது ஹிந்தியில் நாயக், தமிழில் பாய்ஸ், சிவாஜி வரை தொடர்ந்தது.(கட்டிங் கண்ணையா)

இவர் இயக்கத்தில் இரண்டாவது படமாக வெளியாகிய அயன் தமிழ் சினிமாவின் நவீனயுகத்திற்கான மிகச் சிறந்த திரைக்கதை ஆக்கம். பெரிய நடிகர்கள் படத்தில் இருந்தாலும் தன் திரைக்கதை திறமையாலேயே மிகப்பெரும் வெற்றிகளை பதிவு செய்திருக்கிறார். அயன் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜீவாவை வைத்து கோ படத்தை இயக்கினார். ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் முன் ஒரு போட்டோ ஜர்னலிஸ்ட்டாக தமிழின் மிக முக்கியமான அத்தனை இதழ்களையும் தன் புகைப்படங்களால் அலங்கரித்திருக்கிறார் கே.வி.ஆனந்த். அதுதான் கோ படத்தின் அந்த கதாநாயகன் பாத்திரம் அத்தனை நேர்த்தியாக வருவதற்குக் காரணம். ஆனால் அந்த கோ பட அனுபவம் குறித்து அடிக்கடி சொன்ன பிளாஷ் பேக் ஸ்டோரி என்ன தெரியுமோ?

கோ கதையை எழுதி முடிச்ச சமயத்தில் ஒரு புரொடக்‌ஷன் கம்பெனி அஜித்தோட கால்சீட் எங்களுக்குக் கிடைச்சிருக்குது அவருக்கு கதை எழுதுங்கள் அப்ப்டீன்னு என்னிடம் சொல்லி இருந்தாங்க. அப்போ என்கிட்ட இருந்த இந்த கோ கதை அஜீத்துக்கு செட் ஆகாது என்று சொல்லிட்டேன். அடுத்து கதையை கார்த்திக் இடம் சொன்னேன். கால்ஷீட் பிரச்சனை காரணமாக பண்ண முடியாமல் போய்விட்டது. அடுத்தது சிம்புவை வைத்து படம் பண்ணலாம் என்று தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேட்டு இருந்தார்.. சிம்பு தயாராக இருந்தார். பின் அவரிடம் கதை சொன்னேன். சிம்பு ஓகே சொல்லிட்டார். அவரையும் ஹீரோயின் கார்த்திகா வைச்சு போட்டோ ஷூட் பண்ணி இருந்தோம். அடுத்த போட்டோ படத்தோட பாட்டு ஷூட் வேலைகள் எல்லாம் முடிந்து கொண்டிருந்த நிலையில் சிம்புவால் இந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் வந்துடுச்சு. அதற்குப் பிறகு விக்ரம் கிட்ட இந்த படத்தின் கதையை சொன்னேன். விக்ரமுக்கும் கதை பிடிச்சு இருந்துச்சு. ஆனால், விக்ரம் ஏற்கனவே 3 தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி இருப்பதால் அவரால் இந்த படத்தை பண்ண முடியாமல் போனது.

இப்படியே நடந்துக்கிட்டு இருந்ததால் எனக்கு இந்த படத்தை எடுப்பதில் நம்பிக்கை இல்லாமல் போச்சு. ஒரு ஈவ்னிங் என் போனில் பதிவு செஞ்சு வைத்திருந்த நடிகர்கள் எல்லாம் வரிசையாக பார்த்துட்டு இருந்தப்ப தான் ஆர்யா நேம் வந்துச்சு. ஆர்யாவுக்கு கால் பண்ணேன் அவர் போனை எடுக்கலை. மறுபடியும் நம்பர்களை பார்த்துட்டு இருந்தப்ப ஜீவா நம்பர் வந்தது. அவருக்கு கால் பண்ணி கதை சொல்லி டைமும் அவரிடம் வாங்கினேன். ஜீவாவும் கதை கேட்க வந்தார். ஆனால், அவருடைய முகத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தார். ஏனென்றால் அந்த படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது எல்லாருக்குமே தெரியும்.அதனால் இந்த படத்தில் சின்ன ரோலில் தான் ஜீவா நடிப்பார் என்று நினைத்து கொண்டார். ஒரு வழியா, படத்தோட கதையை சொல்லச் சொல்ல ஜீவா நானே எல்லாம் சொல்லச் சிம்பு என்ன செய்வார் என்று கேட்டார். அப்பதான் நான் சிம்பு இந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. நீங்கள் தான் இந்த படத்தின் ஹீரோ என்று சொன்ன பிறகு தான் ஜீவா இன்னொரு தடவை இக் கதையை ஆர்வத்துடன் கேட்டார். பிறகு நான் நடிக்கிறேன் என்று ஓகே சொல்லிவிட்டார் ஜீவா. அதற்குப் பிறகுதான் ஜீவாவை வைத்து இந்த படம் பண்ண ஆரம்பித்தோம்.

இதே போல் தான் படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கும் சில சிக்கல்கள் வந்தது. வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சசிகுமார் கிட்ட தான் பேசி இருந்தோம். ஆனால், அவரால் இந்த படம் பண்ண முடியாதபடி சில காரணங்களால் ஏற்பட்டது. பிறகு அஞ்சாதே படத்தின் ஹீரோ நரேன், உன்னாலே உன்னாலே படம் வினய், கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலரிடம் பேசினோம். அவர்களால் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு தான் அஜ்மல் கிட்ட கதை சொல்லி ஓகே பண்ணோம். இந்த அளவிற்கு நடிகர்கள் முதல் ஒவ்வொரு கலைஞர்கள் வரை என கோ படம் எடுப்பதில் பல சிக்கல்கள் வந்தது. ஆனால், இந்த படத்திற்காக போட்ட முயற்சி எதுவும் வீணாகவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுத்துச்சு அப்படீன்னு சொன்னார்

இதற்குப் பின் கே.வி.ஆனந்த் தான் இயக்கிய மாற்றான், அனேகன், கவண் மற்றும் சமீபத்தில் வெளியான காப்பான் வரை சமூகத்தின் மிக முக்கியமான ஏதாவது ஒரு முக்கிய பிரச்சினையை முன்வைத்தே தன் படங்களை செய்தாலும் அதற்குள் இருக்கும் திரைக்கதை உத்தி இப்போதும் வியக்க வைக்கும். அருமையான நணபர் ஒரு போதும் மறைய மாட்டார்