October 5, 2022

குப்பவண்டி டாட் காம் சம்பத்குமார் எம்.பி.ஏ

பிளஸ் டூ படிச்சவங்க கூட நான் ‘வொய்ட் காலர்’ ஜாப்புக்குத்தான் போவேன்னு அடம்பிடிக்கறத பாக்கிறோம். ஏதாவது ஒரு பாடத்தில பட்டப்படிப்பு, ‍முதுகலைப் பட்டம், பொறியியல் படிச்சு முடிச்சவங்க தங்களுக்கு தகுதியான வேலை கிடைக்கறவரை வீட்ல சும்மா இருக்கனும்னு நினைக்கிறாங்க. ஆனா எதைச் செஞ்சாலும் அதுல நேர்மையும் நாணயமும் இருந்தா அந்த வேலை செய்யறதுல தப்பில் லேன்னு துணிஞ்சு சிலபேரு இறங்கி வேலை செய்யறாங்க. அவங்களோட வெற்றி தான் பிற்காலத்துல அனைவரும் பேசப்படற லெவலுக்கு போகுது..
edit jan 20
ஒரு சிலர் கிடைச்ச வேலையில திருப்தியில்லாம வேற ஏதாவது செஞ்சு சாதிக்கனும்னு வேலையை விட்டுட்டு புதுசா ஏதாச்சும் செய்ய முயற்சிக்கிறாங்க. அப்படித்தான் ஒருத்தர் திருச்சியில எம்.பி.ஏ. பட்டப்படிப்பு முடிச்சுட்டு வேலை கிடைச்சும் அதுல திருப்தியில்லாம சொந்தமா தொழில் தொடங்கலாம்னு திருச்சியிலேயே ஒரு தொழிலை தொடங்கினாரு. அந்த தொழிலுக்கும் அவர் படிச்ச படிப்புக்கும் சம்மந்தமேயில்லேங்கிறதுதான் ஆச்சரியப்படக்கூடிய விஷயம். ஆனா இன்னைக்கு அதுல சாதிச்சுகிட்டு இருக்காரு..

திருச்சியைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவர் தான் அவர். படிக்கும் போதே குடும்ப சூழ்நிலை காரணமா காலையிலே எழுந்து வீடுவீடாக பேப்பர் போடுவார். அப்போது பழையபேப்பர் எடுத்துக்கிறியான்னு சிலர் கேட்பது உண்டாம். அப்போது அவர் அதை பெரிசா எடுத்துக்கல. இப்போ அந்த தொழில் ஞாபகம் வர அதுல புதுசா ஏதாச்சும் செஞ்சு ஆரம்பிச்சா என்ன என்று தன்னுடன் படித்த நிரந்தர வேலையில்லாத சிலரை இணைச்சுகிட்டு இந்த பழைய பேப்பர் வாங்கிறதுக்குன்னே ஒரு இணைய தளத்தை ஆரம்பிச்சாரு.. அந்த இணையதளத்தோடு பேரு http://kuppavandi.com

திருச்சியில இருக்கிறவங்க இந்த இணையதளத்துல போய் தங்கள் வீட்டுக்கு பேப்பர் வாங்க எப்போ வரலாம்னு பதிவு பண்ணிட்டா இவர் அதனை பார்த்துவிட்டு தன்னுடைய நண்பர்கள் சதீஷ்குமார் மற்றும் காமராஜ் ஆகியோரை அழைச்சுகிட்டு அவங்க சொன்ன நேரத்துக்கு சரியாப்போய் அன்னைக்கு பழைய பேப்பரோட விலையை கணக்கு பார்த்து பணத்தை கொடுத்துட்டு அந்த பேப்பர்களை எடுத்துட்டு வந்துரு வாரு.. ஆரம்பத்துல பெரிசா வரவேற்பு இல்ல.

கடந்த 2012ல் துவங்கப்பட்ட இந்த தொழில் மெல்ல மெல்ல வளர்ந்து இப்போது சக்கைபோடு போடுகின்றது. ஏதோ பேப்பர் எடுக்க வர்ற பசங்க என்று ஆரம்பத்தில் நினைத்தவர்கள், இவர்களது பின்புலம் தெரிந்த பிறகு இப்போதெல்லாம் வீட்டினுள் உட்காரவைத்து காபி,டீ,ஜூஸ் என்று கொடுத்து உபசரிக்கின்றனர்.பழைய பேப்பர் மட்டும் என்றில்லாமல் வீட்டில் உள்ள பால்கவர்,மின்சார சாதனங்கள்,உபயோகமில்லாத பர்னிச்சர்கள்,துணிகள் என்று வேண்டாத பழைய பொருட்கள் எது என்றாலும் வாங்கிக்கொண்டு அதற்குரிய விலையை கொடுத்து ரசீதும் கொடுத்து விடுகின்றனர்.

ஒரு நாளைக்கு ஒரு ஏரியா என்று பிரித்துக்கொண்டு பத்தில் இருந்து பதினைந்து வீடுகளுக்கு செல்கின்றனர் காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த சேகரிப்பு வேலை மாலை 6 மணிக்கு முடிகிறது.மாலை 6 மணிக்கு மேல் சேகரித்ததை தங்களது கிடங்கில் கொண்டுவந்து தரம் பிரித்து பின்னர் அதை தேவையானவர்களுக்கு விற்றுவிடுகின்றனர். நீலக்கலர் டிசர்ட் யூனிஃபார்ம் மற்றும் அடையாள அட்டையுடன் மினிலாரியில் போய் இறங்கினால் அடுத்த அரைமணி நேரத்தில் அந்த வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து பிரித்து பில் போட்டு பணம் கொடுத்துவிட்டு பொருட்களை சேகரித்துக்கொண்டு அடுத்து அழைத்த வீட்டிற்கு போயிடறாங்க.

இவர்களது அணுகுமுறை தொழிலில் உள்ள நேர்மை காரணமாக ஒரு முறை இவர்களிடம் வாடிக்கையாளராகிவிட்டால் பின்னர் பலமுறை அழைத்து அவ்வப் போது தங்களிடம் வேண்டாத பொருட்களை கொடுத்து வருகின்றனர் அதைவிட பெரிய விஷயம் தங்களுக்கு தெரிந்த பல குடும்பங்களை இவர்களுக்கு அறிமுகப் படுத்தி வைப்பதுதான்.இவர்கள் சேகரிக்கும் பொருட்களில் உள்ள பிளாஸ்டிக் டப்பா, உடைந்த பிளாஸ்டிக் பக்கெட் போன்ற பொருட் களில் மண்போட்டு செடிகள் வளர்த்து வாடிக்கையாளர் கள் வீட்டில் இலவசமாக கொடுத்து மரம் வளர்க்க ஊக்கப்படுத்துவது தொழிலுக்கு நடுவில் இவர்கள் இந்த சமூகத்திற்கு செய்யும் சேவையாகும்.

இவர்கள் வேலைக்காக நிறுவனங்களைத் தேடி அலைந் தது ஒரு காலம். இப்போது திருச்சியை அடுத்து அரக்கோணம் நாமக்கல்,கோவை போன்ற 40 முக்கிய ஊர்களில் அவங்களுடைய kuppavandi.com ஐ துவக்கி நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளார்கள். இது ஒரு மிகப்பெரிய சாதனைதான்.போயும் போயும் இந்த வேலைய செய்யறதுக்கு இவ்வளவு படிப்பு எதுக்குன்னு கேள்வி கேக்கலாம். கேள்வி கேக்கறவங்க யாரும் எந்த ஐடியாவும் தரப்போறது இல்ல. வேலையும் கொடுக்கப்போறது இல்ல.எந்த வேலை அல்லது தொழில் செய்தாலும் அதில் ஒரு புதுமையை புகுத்தி நேர்மையாகவும், முறையாகவும், நாணயமாகவும் செய்யும் போது அது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதனை இவர்கள் நிரூபித்துள்ளார்கள்.

இவர்கள்.இவர்களை வாழ்த்துவதற்கும் தொடர்புகொள்வதற்குமான எண்கள்:9043107007,9043169966
 

 

உதயகுமார்