June 25, 2021

குடும்பத்துக்குள்ளே குண்டு வைக்கும் குட்டி சாத்தான்கள்….!

பல நாளாய் முடங்கி கிடந்த (ஐரோப்பாவின் ஒன் ஆஃப் தி ஹப்) பிரஷல்ஸ் விமான நிலையம் இன்று திறக்கபடும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. இதே விமான நிலையத்தை சில நாட்களுக்கு முன் மனித வெடிகுண்டு மூலம் வெடிக்க செய்து பல அப்பாவி மக்களின் உயிற்றை பறித்து கொக்கரித்தது ஐ எஸ் ஐ எஸ் என்ற இஸ்லாமிய ஸ்டேட் சைக்கோக்கள். நீங்கள் குண்டு வைத்து தகர்த்தது விமான நிலையமோ அல்லது ரயில் நிலையமோ அல்ல உங்கள் இன எதிர்காலத்தை என்பதை எத்தனை பேர் அறிவார்கள்!!!!!
ravi apr 3


10 நாட்களுக்கு முன்பு ஆம்ஸடர்டாம் வழியே பிரஷல்ஸை கடக்க நேரிட்ட போது வழக்கமாக சந்திக்கும் நண்பர் களில் சிலர் இஸ்லாமியர்கள் ஆனால் அவர்கள் அத்தனை பேரும் பெரிய பயத்துடன் வீட்டை விட்டே வெளியே வர பயந்து வீட்டுக்குள்ளே இருப்பதாக தகவல் வருகிறது. என்ன வென்று விசாரிக்கையில் பல அப்பாவி இஸ்லாமி யர்கள் இந்த வெடிகுண்டு வெடிப்பின் மூலம் எல்லா இஸ்லாமியர்களும் ஐரோப்பா முழுவதும் ஐரோப்பர்களுக்கு எதிரிகளாய் தெரிகின்றனர் என்றால் அது மிகையல்ல.

ஏற்கனவே பல நாடுகளில் இஸ்லாமியர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கும் நேரத்தில் இந்த வெடிக்குண்டு வெடிப்பு இன்னும் நிலமையை மோசமாக்கி இருபப்து மட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான அகதிகள் நிலமை இன்னும் படு மோசமாக சித்திரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் பலரின் குடியுரிமை பறி போகும் நிலமைக்கு ஆளானது தான் இன்னும் மோசமான உண்மை.

சகிப்புதன்மை, மைனாரிட்டி என அதிகம் வருத்தப்படும் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை எவ்வளவோ பெட்டரானது என்பதை இந்த சமீபத்திய நிகழ்வுகள் உலகிற்க்கு உணர்த்துவது மட்டுமில்லாமல் இங்குள்ள இஸ்லாமியர்கள் இன்னும் கட்டுக்கோப்பாக இந்த மாதிரி சைக்கோத்தனத்துக்கு கை கோர்த்து பலர் உயிர்களை பறிக்கும் செயல்களை செய்வதில்லை என்பது தான் உண்மை. பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தான் மைனாரிட்டி சமுதாயமான ஹிந்துக்களுக்கும், கிருத்துவர்களுக்கும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதை போன வார ஈஸ்டர் வெடிக்குண்டு வெடிப்பில் மூலம் தெளிவாகிறது. ஆனால் இந்தியா சில அரசியல்வாதிகளை தவிர்த்து ஒரு இஸ்லாமியனையோ அல்லது கிருத்துவனையோ என்றும் மைனாரிட்டி குடிமகனாய் பார்த்தது இல்லை என்பதே உண்மை.

டொனால்ட் டிரம்ப் மட்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்தால் அடுத்த 4 வருடத்தில் அமெரிக்காவின் இஸ்லாமியர்களுக்கு படு சோதனைக்காலமாக அமையலாம் என்று தெளிவாக தெரிவது மட்டுமில்லாமல் பல நாடுகளில் இவர்களின் நிலமை இன்னும் மோசமாக போகும் என்பது கண்கூடாய் சமீபத்திய நிகழ்வுகளால் தெரிகிறது. நீங்கள் நேரடியாக, மறைமுகமாக ஆதரிக்கும் இந்த மாதிரி செயல்கள் உங்களின் மற்றும் உங்களின் பிள்ளைகளுக்கு ஒரு சோதனையான எதிர்காலத்தை உருவாக்குகிறேர்கள் என்பதை நினைவு கொள்ளத்தான் வேண்டும்.

உங்கள் எதிர்காலம் உங்களின் கையில் மட்டுமே தற்போது – உங்கள் எதிரி இப்போது உங்களது மதத்துக்குள்ளேயே மற்றும் உங்கள் வீட்டுக்குள்ளேயே என்பதை நீங்கள் கண்டிப்பாய் உணரவேண்டிய தருணம். பலியான அப்பாவி உயிர்களுக்கும் பலியான தற்கொலை படை முட்டாள்களின் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்….