October 21, 2021

”கிளீன் இந்தியா” திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பாரதப் பிரதமர் மோடி கடந்த மாதம் பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை சுத்தப்படுத்திகொள்ளவேண்டும். அதை போல் நாட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அக்டோபர் 2-ந் தேதி மிஸ்டர் க்ளீன் என்ற தூய்மைப்படுத்தும் திட்டம் துவக்கி வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் அமெரிக்கா சென்றுவிட்டு பிரதமர் மோடி நாடு திரும்பியுள்ள நேரத்தில் இன்று இத்திட்டம் துவக்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை தலைநகர் டெல்லியில் மோடி துவக்கி வைக்கிறார்.
modi clean
அதே நேரத்தில் பல்வேறு மாநிலங்களிலும் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தொழில் முனைவோர்களையும், தொழில் நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை மோடி துவக்கி வைத்தார். தற்போது க்ளீன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று காலை காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்திய மோடி, வால்மிகி காலனிக்கு சென்றார். அங்குள்ள வால்மிகி மந்திர் சென்று வழிபட்டார். அங்குள்ள காந்தி படத்திற்கு மாலை தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் குப்பைகளை கூட்டி குப்பைத் தொட்டியில் போட்டு தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இந்திய நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் கனவு ஆகும். மகாத்மா காந்தியின் அந்த கனவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அவரது கனவை நிறைவேற்ற நாம் அனைவரும் பாடுபட வேண்டும். நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள ஒவ்வொரு இந்தியனும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும். திட்டத்தின் லோகோவில் உள்ள மகாத்மா காந்தி நம்மை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். எப்போது இந்தியாவை சுத்தப்படுத்த போகிறீர்கள் என்று நம்மிடம் கேள்வி எழுப்பி வருகிறார்.

முன்னதாக இந்த திட்டத்திற்கான பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பிரதமர் இந்தியாவின் முதல்மகன். பின்னரே பிரதம மந்திரி. திட்டம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது என்று எனக்கு தெரியும். என்ன நடந்தது என்று பார்த்தீர்களா?. ஆனால் நான் அதனை எதிர்க்கொள்ள தயாராக வந்துள்ளேன். இந்தியாவை சுத்தப்படுத்த வேண்டும் என்பது துப்பரவு பணியாளர் பொறுப்பு இல்லை. ஒவ்வொரு இந்தியனுடைய பொறுப்பு. சுத்தமான இந்தியா திட்டத்தை இந்திய அரசால் மட்டும் செய்து முடிப்பது எனபது சாத்தியமானது இல்லை. 125 கோடி பொதுமக்களுக்கும் சுத்தமான இந்தியாவை உருவாக்க வேண்டு என்பதில் பொறுப்பு உள்ளது.
Modi-Broom_
நாம் செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளோம். பிரதமரோ அல்லது மந்திரியோ இதனை செய்ய முடியாது. ஆனால் தேசமக்கள் இதனை செய்துள்ளனர். நமது விஞ்ஞானிகள் இதனை செய்துள்ளனர். செவ்வாய் கிரகத்தை அடைந்த நம்மால் சுத்தமான இந்தியாவை உருவாக்க முடியாது. இந்தியர்கள் செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளனர். இந்தியர்கள் தெருக்கள் மற்றும் வீதிகளுக்கு சென்று சுத்தம் செய்ய முடியாதா என்ன?. இந்தியாவால் அதனை செய்ய முடியும். இந்திய மக்களால் அதனை செய்ய முடியும். இது மிகவும் எளிமையான திட்டம் இல்லை. ஆனால் 2019ம் ஆண்டுக்கள் நாம் சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம். இது மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தின் போது காந்திஜிக்கு ஒரு காணிக்கை இருக்கும். ” என்றார்r