October 16, 2021

கிளீன் இந்தியா திட்டத்தில் ‘சமந்தா’

பிரதமர் நரேந்திர மோடியின் கிளீன் இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பலரும் பங்கேற்று வருகின்றனர்.ந்ம்மூர் நடிகர்கள் சும்மானாச்சும் சீன் போட்டுவரும் நிலையில் ஹிந்தி நடிகர்கள் பலரும் மெய்யாலுமே துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் ஓரளாவவது விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
samantha
இந்த லிஸ்டில் நான்கு நாட்களுக்கு முன்னாள் தமன்னாவும், கிளீன் இந்தியா திட்டத்தில் இணைந்து மும்பை லோகந்த் வாலாவில் ஒரு பகுதியில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தார்.கூடவே தன சுத்தத்தை விடியோவில் எடுத்து போட்டிருநதார்.

இதனிடையே தற்போது சமந்தாவும் கிளீன் இந்தியா திட்டத்தில் இணைந்துள்ளார். இதையொட்டி \ஹைதராபாத்தில் உள்ள அரசு பள்ளி அருகே உள்ள குப்பைகளை துடைப்பத்துடன் சென்று சுத்தம் செய்து கிளீன் இந்தியா திட்டத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சி என்று அவர் கூறியுள்ளார்.