September 21, 2021

கிளீன் இந்தியாவில் இணைந்த த்ரிஷா!

பிரதமர் நரேந்திர மோடியின் கிளீன் இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர். மும்பையில் ஹிந்தி நடிகர்களும், நடிகைகளும் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறதாம்.இதனிடையே இந்த லிஸ்டில் லேட்டஸ்ட்டாக நடிகை த்ரிஷா!இணைந்து கொண்டு தனது நண்பர்களான விஷால், ஜீவா, ஜெயம் ரவி மற்றும் சி.சி.எல். நட்சத்திர கிரிக்கெட் அணிக்களையெல்லாம் கிளீன் இந்தியாவில் சேரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
thirsa
பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு ஆதரவாக ‘Environmentalist Foundation of India’ அமைப்பு சென்னை முடிச்சூர் அருகே விரைவில் துவங்கவுள்ள விலங்குகள் மையத்தை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டது. அதன் ஒரு அங்கமாக சென்னை அருகே உள்ள முடிச்சூர் என்ற கிராமத்தில் ஒரு விலங்குகளுக்கான மையத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டது..இதனிடையே விலங்குகள் மீது அலாதி அன்பு கொண்டவரான த்ரிஷா இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு , தன்னுடன் இணைந்து பணியாற்றிய 19 இளைஞர்கள் உடன் இணைந்து அந்த மையத்தில் மேற்கொள்ளும் சுகாதார விழிப்பு பணியில் ஈடுபட்டார். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அவர் இந்த சேவையை மேற்கொண்டார்.

இந்த விலங்கு மையம் நிராதரவான மற்றும் வயோதிக விலங்குகளுக்கான பிரத்தியேக மையம் ஆகும்.2015 ஆண்டு முதல் துவங்க உள்ள இந்த மையம் மேற்சொன்ன காரணங்களுக்காக செயல்படுறது.’lஇந்த பூமி நமக்கு மட்டுமே உரியது அல்ல.இதர ஜீவனங்களும் நம்முடன் வாழ வேண்டும்.,அவை வாழ தகுதியான சுத்தமான , சுகாதாரமான சூழ்நிலையை அமைத்து தருவது நம் பொறுப்பு’ என்று கூறினார் த்ரிஷா.