September 26, 2021

கிளாஸிக் லெஜன்ட்ஸ் – பாகம் 1 =சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின்

ஒரு முறை பிறந்து – இரு முறை இறந்து – இரு முறை அடக்கம் – உலகில் அதிக நேரம் ஸ்டேன்டிங் ஒவேஷன் ஆஸ்கார் அவார்ட்டின் போது – அதிக சம்பளம் வாங்கிய முதல் ஹாலிவுட் கதா நாயகன் என்று பல சாதனைகளை வீடியோ மற்றும் எழுத்துக்கள் வடிவத்தில் ..
ravi chaplin
இனிமேல் வாரா வாரம் கிளாஸிக் லெஜென்ட்ஸ் என்று ஒரு பகுதியை எழுதுவதோடு இல்லாமல் அவர்களை பற்றி சிறப்பு வீடியோக்களையும் இனைக்கும் முயற்ச்சியில் 2014 ஆம் நூற்றான்டு கொண்டாடும் ” சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின்” என்ற சரித்திரம் படைத்த மனிதரை பற்றீ சிறு குறிப்பும் வீடியோவும் பார்ப்போம்.

சாதனையாளர்களின் பலரின் ஆரம்பகட்டம் வறுமை தான் என்பது எழுதப்படாத விதி. அது சார்லி ஸ்பென்ஸர் சாப்லின் அவர்களுக்கும் விதிவிலக்கல்ல. பிரிட்டனில் உள்ள லன்டன் என்னும் நகரத்தில் 16 ஏப்ரல் 1889 ஆம் அண்டு பிறந்து பின் தந்தை கைவிட தன் படிப்பை தொடர முடியாமல் வறுமையில் வாடிய போது 14 வயதில் அவர்கள் தாயார் மன நிலை குன்றியவர்களுக்கான மென்டல் அசைலம் செல்ல 14 வயதில் இருந்து மேடை நாடகம், சர்க்கஸ், காமெடி டூர் என மேடை ஏறியவர் 19 ஆம் வயதில் ஃபிரட் கார்னோ என்னும் கம்பெனி இவரி திறமையை கண்டு அமெரிக்காவுக்கு கூட்டி சென்று 1914 ஆம் ஆண்டு ( சரியாக 100 வருடத்துக்கு முன்பு) மேகிங் ஏ லிவிங் என்னும் படத்தில் நடிக்க ஆரம்பித்து சரியாக நான்கே வருடத்தில் 1918ல் உலக புகழ் பெற்ற ஒருவரில் சார்லி சாப்ளினும் ஒருவர். பின்பு ஒவ்வொரு ஹாலிவுட் ஸ்டுடியோவும் இவரை துரத்த தொடங்கினர் படத்தில் நடிக்க சில கம்பெனிகள் வார சம்பளமாய் 10,000 டாலர் வரை தர இசைந்தது ஒன்னரை லட்சம் வரை பெற்ற ஒரே ஹாலிவுட் நடிகர் இவர் தான்.

இப்படி புகழ் உச்சிக்கு சென்றவர் 1940 ஆம் ஆண்டு ஒரு நாவிதரின் மகன் டிக்ட்டேட்டராக ஆனால் என்ற காவியத்தை ஹிட்லரை மனதில் வைத்து எடுக்கபட்ட படம் தான் அவருக்கு சோதனையாக அமைந்தது. அந்த படத்தின் உணர்ச்ச்வசபட்டு பேசிய வசனம் இங்கு இனைத்திருக்கிறேன் இது தான் அவரின் பேச்சிலே பெஸ்ட் பேச்சு என இன்றும் ஹாலிவுட் பிரம்மாக்கள் கூறுகின்றனர். இவரின் அந்த டிக்டேட்டர் படம் கடும் சர்ச்சயை உண்டாக்க இவர் கம்யூனிஸ சிந்தனையாளர் என்று இவருக்கு புது படமோ அல்லது வேறு எதுவும் நடக்காமல் நொந்து போன சமயம் தான் பெட்டர்னிட்டி லா சட்ட சிக்கலில் மாட்டி எஃப் பி ஐ இவரை துரத்த அமெரிக்காவை விட்டு வெளியேறி அமெரிக்காவின் ரீ என்ட்ரி பெர்மிட்டை கூட சரன்டர் செய்ய வைத்து ஸ்விட்ஸர்லேந்தில் செட்டில் ஆனவர்.

நான்கு முறை திருமண்ம் செய்தும் சரிவராமல் நான்காவதாய் திருமணம் செய்த ஊனா ஒ நெயில் என்பவர் தான் இவரின் கடைசி நாள் வரை உயிர் வாழ்ந்தார். இவருக்கு அதற்க்கு பிறகு எத்தனை படங்கள் வந்தாலும் இவர் தயாரித்தாலும் இவரின் பழைய புகழை அடையவே முடியாமல் திரும்பவும் வறுமை வர தன் அமெரிக்க சொத்து – பல ஸ்டுடியோக்களின் பங்கை விற்றார். 1972 ஆம் ஆன்டு சினிமாவின் உயரிய விருதான கவுரவ ஆஸ்கார் அவார்ட் வழங்க கூப்பிட்டும் அமெரிக்காவுக்கு செல்ல இவருக்கு விருப்பம் இல்லாமல் போன காரணம் தான் சென்றால் எஃப் பி ஐ மூலம் கைது செய்யப்படலாம் என்று. ஆனால் அமெரிக்க அரசாங்க உறுதி மொழி அளித்ததால் இவர் சென்று அந்த் ஆஸ்கார் அவார்ட்டை பெறும் முன் எழுந்து நின்று கை தட்டிய (ஸ்டான்டிங் ஒவேஷன்) சுமார் 12 நிமிடங்கள் நீடித்தது இந்த ஒரு கலைஞருக்குத்தான் இன்று வரை இதுவும் ரெக்கார்ட்,

இவருக்கு அடிக்கடி ஸ்ட்ரோக் என்னும் பக்கவாதம் வர இறுதியாக 1977 ஆம் ஆண்டு இறந்து போனார். மிகவும் எளிமையாக அடக்கம் செய்யப்பட்ட இவரின் உடலை இரண்டு பேர் 1978ஆம் ஆன்டு தோன்டி எடுத்து ஒரு மறைவிடத்தில் வைத்து சார்லி சாப்ளின் மனைவியிடம் பணம் கேட்டு மிரட்டி கடைசியில் போலீஸ் பெருமளவுக்கு ஐரோப்பா யூனியனில் தேடி அவரின் பிணப்பெட்டியை கண்டுப்பிடித்து திரும்பவும் சிமென்ட் கான்க்ரீட் போட்டு இரண்டாவது முறையாக புதைத்த ஒரே கலைஞனும் இவர் மட்டும் தான். இந்த வருடம் 2014 ஆம் ஆண்டு அவர் நடிக்க வந்து 100 வருடங்கள் ஆனாலும் அவர் புகழ் இன்னும் பல ஆண்டுகளுக்கு இருக்கும் என்பதில் மாற்றூ கருத்தில்லை.

https://www.facebook.com/video.php?v=915822981769431&set=vb.100000252143571&type=2&theater

அடுத்தவாரம் இன்னொரு லெஜன்ட்டை பற்றீ வீடியோவுடன்…………….. நன்றி – ரவி நாகராஜன்.