October 19, 2021

கிளம்புங்கப்பூ! – உதவி செய்ய வந்த நாடுகளை விரட்டும் நேபாளம்!

பூகம்பத்தில் சின்னாபின்னமான நேபாளத்தில் 34 நாடுகளில் இருந்து வந்துள்ள மீட்புக்குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்புக்குழுக்களை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பேர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டதுடன் அவர்களுக்கு அவசர முதல் உதவி, உணவு மற்றும் அடிப்படை பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்தநிலையில் காத்மாண்டு மற்றும் சுற்றுவாட்டார பகுதிகளில் பெரும்பாலான மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டதால் வெளிநாட்டு குழுவினரை திரும்பிச் செல்லுமாறு நேபாள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
indian nepal
நகர்ப்புறங்களில் மீட்பு பணிகள் முடிந்துவிட்டதால், வெளிநாட்டைச் சேர்ந்த மீட்பு குழுவினர் கிராமங்களில் சென்று பணிகளை மேற்கொள்ளலாம் அல்லது வெளியேறலாம் என்றும், மற்ற மீட்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளூர் குழுக்களே போதுமானது என்றும் நேபாளத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நிலநடுக்கத்தில் நிலைகுலைந்துபோன நேபாளத்தில் செய்தி சேகரிக்கும் இந்திய செய்தி ஊடகங்கள், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்வதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
media nepal
மீட்புப் பணிகளை இந்திய ஊடகங்கள் சுய லாபத்திற்காக, எதிர்மறை உளவியல் அணுகுமுறையுடன் செய்திகளை வெளியிட்டு பரபரப்பாக்கியதாக டுவிட்டரில் காய்ச்சி எடுக்கின்றனர்

இந்நிலையில் நேபாள அரசின் வேண்டுகோளை தொடர்ந்து அங்கு முகாமிட்டு இருந்த 6 இந்திய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுக்கள் நாட்டுக்கு திரும்புகின்றனர். ஜப்பான், துருக்கி, உக்ரைன், பிரிட்டன் மற்றும் நெகர்லாந்து நாடுகளும் திரும்ப தயாராகி விட்டனர்.