October 21, 2021

காஷ்மீர், ஜார்கண்டில் 5 கட்ட தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் ஜனவரி 19-ஆம் தேதியுடனும், ஜார்கண்டில் வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதியுடனும் சட்டப்பேரவை ஆயுட்காலம் முடிவுறுகிறது. இதைத்தொடர்ந்து, இவ்விரு மாநிலங்களிலும் 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் 2 மாநிலத்திலும் உடனடியாக அமலுக்கு வருகிறது “என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
election oct 25
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்,”, 87 சட்டசபை உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபை காலம் வரும் ஜனவரி 19ம் தேதி முடிகிறது. இது போல் ஜார்கண்ட் சட்டசபையும் வரும் ஜனவரி 3 ம் தேதியுடன் முடிகிறது. 81 தொகுதிகள் கொண்ட இம்மாநிலத்திற்கும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் மின்னணு ஓட்டுப் பதிவு நடக்கும். மாநில மற்றும் மத்திய படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இரு மாநிலங்களும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதாகும். இதனை தேர்தல் கமிஷன் சிறப்பாக செய்யும். இரு மாநிலத்திலும் மொத்தம் 5 கட்ட தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், உடனடியாக இரு மாநிலங் களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23 ஆம் தேதியன்று நடைபெறும்”

முதல் கட்டமாக வரும் நவம்பர் மாதம் 25 ம் தேதியும், 2வது கட்டமாக டிசம்பர். 2 ம் தேதியும், 3 வது கட்டமாக டிசம்பர். 9 ம்தேதியும் 4 வது கட்டமாக டிசம்பர்.14 ம்தேதியும் , 5ம் கட்டமாக டிசம்பர்.20 ம்தேதியும் ஓட்டுப்பதிவு நடக்கும். டில்லியில் தேர்தல் நடத்தப்பட வேண்டிய 3 தொகுதிகளில் வரும் 25ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கும். இரு மாநில தேர்தல் ஓட்டுக்களும் வரும் டிசம்பர் மாதம் 23 ம் தேதி எண்ணப்படும். முதல்கட்ட தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் அக்டோபர் 28ம் தேதியும், ஜார்கண்ட்டில் அக். 29ம் தேதியும் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.

ஓட்டுக்கு பணம், மது கொடுத்தால் கவனித்து நடவடிக்கை எடுக்க பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 10 ஆயிரத்து 15 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 24 ஆயிரத்து 648 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். நோட்டா முறை பயன்படுத்தப்படும்.”என்று சம்பத் கூறினார்.