September 21, 2021

காலமான காதலிக்கு மோதிரம் அணிவித்து கல்லறைக்கு வழியனுப்பிய லவ்வர்!

இங்கிலாந்துலே இருக்கற ஜோஷ் தாம்ப்சன் -ங்கற தம்பி ஐரோப்பாவின் கிரீஸ் கன்ட்ரியே டென் னிஸ் பிராக்டிஸ் கத்துக் குடுத்து வருகிறார். அவரது லவ்வர் அபிகெய்ல் ஹால் (18) பயோ மெடிக்கல் படித்து வந்தார். போன புதன்கிழமை இந்த பொண்ணு ரூமிலேயே மயங்கிக் கிடந் ததைப் பாத்த அவளோட பிரண்ட்ஸ் ஷாக் அகி அவளைத் தட்டி எழுப்பியபடி., அவளை உத்துப் பார்த்தப் போது, அந்த கேர்ள் இறந்து போயிருந்தது தெரிய வந்தது.அப்புறம் போலீசார்,அவளோட காதலன் மற்றும் ஃபேமிலிக்கு இது தொடர்பாக தகவல் அளித்தனர்.
dead body ring
தன்னோட லவ்வர் அபிகெய்ல் இறந்து போனதைப் கேட்டு ஆடிப் போன ஜோஷ் உடனடியாக சொந்த நாட்டுக்கு வந்து சேர்ந்தார். ஜோஷ், அபிகெய்லை மேரேஜ் செய்ய முடிவு செஞ்சி அவளுக்காக மோதிரம் வாங்கியதைத் சொல்லி அழுதார். அப்படியே அவளது பேரண்ட்ஸ் அனுமதியுடன் இறந்து போன அவளது விரலில் மோதிரம் அணிவித்தார்.

அபிகெய்லுக்கு அப்படி ரிங் அணிவித்த போட்டோவை தனது சமூக வலை தளப் பக்கத்தில் வெளி யிட்ட ஜோஷ், ‘அபிகெய்லுக்கும் எனக்கும் இப்போது நிச்சயம் ஆகி விட்டது. அவள்தான் என் வாழ்க்கை. அவள் மீது எனக்கிருக்கும் காதலை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது’ என ஃபீல் பண்ணி குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ‘எனக்கும், அவளது குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருந்தமைக்கு நன்றி. வாழ்க்கை இனி ஒருபோதும், முன்பைப் போல் இருக்காது. உங்களது ஆதரவை எப்போதும் கொடுக்க வேண்டுகிறேன்’ என தெரிவித்தார்.

இதுக்கிடையிலே அபிகெய்ல் மரணம் இயற்கை மரணம் என்று போலீசார் தகவல் தெரிவிச்சாங்க!