September 29, 2021

”கார்பிளேன்” – ஆம் பறக்கும் கார் தயார்!

ஜெர்மனியின் கார்பிளேன் தான் இந்த வார ஹாட் டாபிக். – கார்பிளேன் ஒரு சாதாரண கார் போல தோற்றமளிக்கும் ஒரு கார் என்றாலும் எப்பல்லாம் டிராஃபிக் ஜாம் ஏற்படுதோ அப்பல்லாம் உடனே ஒரு 300 அடி தூர காலி சாலை இருந்தால் போதுமாம் உடனே இது விமானமாக மாறி பறக்க ஆரம்பித்துவிடும்.
ravi 12
இந்த கார் விமானம் கார் போல அதே மைலேஜும் தரும் ஆனால் இதன் பறக்கும் ஸ்பீடு 200 – 230 கிலோமீட்டர் வரை ஒரு மணி நேரத்தில் செல்ல முடியும். சரி இதன் இறக்கை எல்லாம் இருந்தா சாதாரண சாலையில் எப்படி பயணிப்பது என்று நீங்கள் கேட்டால் – எப்போது பறக்க வேண்டுமோ அந்த 300 அடி தூரத்தில் ஒடும் போது ஃபிலைட் மோட் என்னும் காரில் உள்ள பட்டனை தட்டினால் உடனே அதன் இறக்கைகள் உள்ளே இருந்து வெளிபட்டு சரியாக 20 நொடிகளில் விமானமாக மாறி வானில் ஜிவ்வென்று பறக்க தொடங்கிவிடும். இதன் மூலம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு பர்சென்ட் டிராஃபிக் கூட இனிமே இருக்காதாம்

ஆமாம் தரையில் ட்ராஃபிக் ஜாம் இருக்காது ஆனால் வானில் அதிக டிராஃபிக் ஜாம் இருக்க வாய்ப்புள்ளதா என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது என்பது தான் பதிலாக இருக்குமாம். ஆனால் அமெரிக்கன் சிவில் ஏவியேஷன் இதற்க்கு லைசென்ஸை பல காரணங்களை காட்டி நிறுத்தி வைத்தாலும் – இதை அப்ரூவ் ப்ண்ணி ரெஜிஸ்ட்டர் பண்ணி சாலையிலும் – வானத்தில் செலுத்தி காட்டியிருக்கின்றனர்.

PS -சல்மான் கான் போன்ற அப்பாவிகள் இனிமே பிளாட்ஃபாரத்துல வண்டிய ஓட்ட வேண்டாம் –

இப்போதக்கு ஐரோப்ப யூனியனில் இது ஒகே ஒகே….இதன் விளக்க வீடியோ காண –

http://carplane.com/

Flying Car is now reality and test drive/fly is success