காமெடி திரில்லர் படமாக உருவாகும் ” தோடா அட்றா சக்க” மினி ஆல்பம்!

எ பூமிகா சினிமா என்ற படநிறுவனம் சார்பாக D.ரமேஷ்பாபு தயாரிக்கும் படம் “தோடா அட்றா சக்க”இந்த படத்தில் ஆர்யன்ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகிகளாக மோனிகா சிங் , இஷா ஆகியோர் நடிக்கிறார்கள் மற்றும் கஞ்சாகருப்பு,சென்ட்ராயன்,சிவசங்கர்,கோபி, ராஜுகனகாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.தயாரிப்பு – D.ரமேஷ்பாபு இவர் பிரபல நடிகைகள் பலருக்கு மேனேஜராக இருக்கிறார் சுனைனாவின் மேனேஜர் என்பது குறிப்பிடத் தக்கது.படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ஹைதராபாத் ,சென்னை , ஊட்டி போன்ற இடங்களில் படமாக்கப் பட்டுள்ளது.அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது படம் காமெடி திரில்லர் படமாக உருவாகிறது. படத்தில் ஆர்யன்ராஜேஷ் – இஷா பங்கு பெற்ற க்ளாமர் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டது.

கோடங்கி