September 17, 2021

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்: இலங்கை தூதர் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து எதுவும் கூறப்படவில்லை. பிரதமர் மன்மோகன்சிங் வருகை குறித்து இந்திய அரசு தான் முடிவு செய்யும். பிரதமர் பங்கேற்காமல் தவிர்த்தால், அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து பரிசிலீப்போம் என்றார். மேலும் காமன்வெல்த் மாநாட்டினை தவிர்த்தால் சர்வதேச சமூகத்தில் இருந்து இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் என்று இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
24 - srilanka chogm-flags
இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அந்த நாட்டை காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து எந்த பிரதிநிதியும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுபற்றி கருத்து தெரிவித்த இலங்கை தூதர் பிரகாஷ் கரியவாசம், காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் என்று எச்சரித்துள்ளார்.

‘பிரதமர் போகவில்லை என்றால் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை நாம் யோசிக்க வேண்டும். யார் தனிமைப்படுத்தப்படுவார்கள்? கனடா தவிர மற்ற ஒவ்வொரு நாடும் பங்கேற்கிறது. அதனால், பங்கேற்காத நாடு தனிமைப்படுத்தப்படும். தமிழர்களின் நிலை பற்றி தமிழக சட்டமன்றத்திற்கு தெரியவில்லை. பிரதமர் மன்மேகன் சிங்கின் பயணம் குறித்து இந்திய அரசு மட்டுமே முடிவு செய்ய உரிமை உள்ளது‘ என்று கரியவாசம் தெரிவித்தார்.

India will be isolated if it boycotts CHOGM: Sri Lanka
**********************************************************
With Prime Minister Manmohan Singh yet to take a decision on whether to attend the Commonwealth Heads of Government Meeting in Colombo next month, Sri Lanka has made it clear that India would be isolated if it does not participate in the summit.“Human rights violation takes place in every country in the world. We have our share of it and we are making effort to correct them.