September 27, 2021

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது.- தீர்மானத்தை விளக்கி பிரதமருக்கு ஜெ.கடிதம்

“மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டுமிதிக்கிறது.இந்தியா சார்பில் பெயரளவில் கூட யாரும் செல்லக்கூடாது காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.இலங்கைக்கு ஆயுத உதவிசெய்ததற்கு பரிகாரமாக மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க வேண்டும். தமிழர்களுக்கு சாதகமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை”
என்று சட்டப்பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசி அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கடிதம் வாயிலாகவும் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது
nov 12-jaya_tn_aiadmk
தமிழக சட்டப்பேரவை இன்று (12ஆம் தேதி) மாலை 6 மணிக்கு கூடியது. அப்போது, பேரவைத் தலைவர் ”அரசினர் தீர்மானம் ஒன்றை முதல்வர் கொண்டு வருவார்” என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவர் உரைக்குப் பிறகு அரசினர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்ததில் “‘இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட பங்கேற்க கூடாது என்று இந்த பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், மத்திய அரசு அதை ஏற்காதது தமிழர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பார் என்ற மத்திய அரசின் முடிவு மனவேதனை அளிக்கிறது.

இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், இலங்கையின் மனித நேய செயலை அங்கீகரித்ததாக ஆகிவிடும். காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக அடுத்த 2 ஆண்டுகளுக்கு இலங்கை அதிபர் நீடிக்கவும், வழிவகை உண்டாக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தியா காமன்வெல்த் மாநாட்டை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது”என்று முதல்வர் ஜெயலலிதா தீர்மானித்தை முன்மொழிந்தார்.

இதையடுத்து,, இந்த தீர்மானம் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களின் விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு பிறகு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சுமார் இரவு 7.50 மணியளவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கடிதம் வாயிலாகவும் பிரதமருக்கு அனுப்பப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார். தீர்மானத்தின் நகலையும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் அனுப்பி வைத்துள்ளார்.