September 26, 2021

காதல் நிறைந்த திகில் படமான ‘விழி மூடி யோசித்தால்’.!ஆல்பம்

தற்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்ட் காமெடி மற்றும் திகில் படங்கள் தானாம். அந்த வகையில் மற்றொரு காதல் + திகில் படமாக உருவாகும் படம் தான் ‘விழி மூடி யோசித்தால்’. இப்படத்தை டுவிஸ்டர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே.ஜி.செந்தில்குமார் தயாரித்து, இயக்குவதுடன், ஹீரோவாகவும் நடிக்கிறார்.
vizhi modi yosi poster
அமெரிக்காவில் உள்ள தி நியூயார்க் பிலிம் அகடாமி யூனிவர்சல் ஸ்டுடியோ, ஹாலிவுட் (The New York Film Academy Universal Studios, Hollywood) மையத்தில் இயக்கம் மற்றும் நடிப்பிற்கான பயிற்சி பெற்று 25க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கி நடித்துள்ள செந்தில்குமார், 15க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களையும் இயக்கியுள்ளார்.இவர் இயக்கிய சிம்பிளிசிட்டி (Simplicity) மற்றும் டேவ் டிராப்ஸ் (Dew Deop) ஆகிய இரண்டு குறும்படங்களுக்கு அமெரிக்காவில் அக்கோலேட் சர்வதேச திரைப்பட விழாவில் (Accolade International Film Festival) சிறந்த இயக்குநர், சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.தன் படம் குறித்து,“இப்படத்தின் முதல் பாதி மிக அழகான காதல் கதையாகவும், இரண்டாம் பாதி திகில் களமாகவும் அமைந்துள்ளது. மொத்தத்தில் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் காதல் நிறைந்த திகில் படமாக உருவாகி இருக்கிறது” என்றார்