September 17, 2021

காதலனிடம் ஐ போன் கேட்டு நடுரோட்டில் ஆடையின்றி அடம் பிடித்தச் சீனப் பெண்! வீடியோ

அண்மையில் சீனாவை சேர்ந்த ஹுவாங் மற்றும் வு என்ற இரண்டு இளைஞர்கள் ஐ போன் 6 எஸ் வாங்க பணம் இல்லாத காரணத்தால், தங்கள் கிட்னியை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு போன் வாங்க முடிவு செய்து .இதற்காக அவர்கள் இணையம் மூலம் ஒரு தரகரை அணுகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யது. இதனிடையே தற்போது சீனாவில் தனது காதலர் தனக்கு ஐ போன் 6 எஸ் வாங்கித் தர மறுத்ததற்காக, சீனாவில் இளம்பெண் ஒருவர் நடு ரோட்டில் ஆடை களைக் களைந்து நிர்வாணமாக நின்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங் களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
i phone nude
இது குறித்து சீனாவின் டெய்லி ஸ்டாரில் செய்தி வந்துள்ள செய்தி இதுதான் :.

சில தினங்களுக்கு முன்னர், சீனாவின் நான்ஜிங் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலருடன் பிசியான மார்க்கெட் பகுதியில் சென்று கொண்டிருந் தார்.அது ஐ போன் 6 s -க்கு பரபரப்பான புக்கிங் நடந்துகொண்டிருந்த நேரம். தனக்கு ஐ போன் 6 எஸ் வாங்கித் தருமாறு தனது காதலரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் முடியாது எனக் கூறியுள்ளார். அதனை ஏற்க மறுத்த அந்த பெண், ஏன் வாங்கித் தரமுடியாது என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து இருவ ருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து வாக்கு வாதம் செய்தபடியே மார்க்கெட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

ஒருகட்டத்தில் பிடிவாதம் அதிகமான அந்த இளம்பெண் நடு ரோட்டில், தான் அணிந்திருந்த ஆடை களை கழட்டி எறிந்து விட்டு, நிர்வாணமாக நின்றார் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.அந்த பகுதியே தன்னை பார்க்கிறது என்ற கூச்சம் அவளுக்கு துளியும் இல்லையாம். அதே சமயம் இதனை அங்கிருந்த யாரும் தடுக்க முன் வராமல் வேடிக்கை பார்த்தபடியே சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற வயதான பெண்மணி ஒருவர் கவனித்து, அந்த இளம்பெண்ணை சமா தானம் செய்து கீழே கிடந்த ஆடைகளை எடுத்துக் கொடுத்து அணிந்து கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

பின்னர் ஒருவாராக சாமாதானம் அடைந்து அந்த பெண் உடைகளை அணிந்து கொண்டாராம் – அதுவும் ஒரிரு வாரத்தில் ஐ போன் கிடைக்கும் என்று லவ்வர் பிராமிஸ் பண்ணிய பிறகுதானாம்.

அந்த வீடியோ :