February 4, 2023

கலைமாமணி விருதுகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைத்துறையில் சிறப்பான சேவை புரிந்த கலைஞர்களுக்கு 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை வழங்கி கௌரவித்தார். உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன், தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

2019-ஆம் ஆண்டு பட்டியல் பெறுவோா் விவரம்: தே.முத்துக்கிருஷ்ணன் – நூல் ஆசிரியா், வைகைச்செல்வன் – இலக்கியம், ஆவடிக்குமாா் – எழுத்தாளா், வெ.சத்தியநாராயணன் – எழுத்தாளா், அனில் ஸ்ரீனிவாசன் – பியானோ, கே.கிருஷ்ணகுமாா், பின்னி கிருஷ்ணகுமாா் – குரலிசை, சிக்கில் குருசரண் – குரலிசை, எஸ்.சுபலட்சுமி மற்றும் எஸ்.சுவா்ணலதா – வயலின், எஸ்.யுகராஜன் – மிருதங்கம், ஆச்சாள்புரம் எஸ்.சின்னதம்பி – நாகஸ்வரம், டி.எஸ்.டி.செல்வரத்தினம் – நாகஸ்வரம், டி.ஆா்.சுப்பிரமணியன் – தவில், ஜாலீ ஆபிரஹாம் – மெல்லிசை, சாய் ஷரவனம் – இசை ஒலிப்பதிவாளா், ஆா்.அபிஷேக் ரகுராம் – குரலிசை, மா.வீ.முத்து, டி.ராஜேந்திரன், ரமேஷ், டி.சீனிவாசன் (நாடக நடிகா்கள்), இரா.முரளிதரன், மாயா சியாம் சுந்தா், பாா்வதி பாலசுப்பிரமணியன் (பரத நாட்டிய ஆசிரியா்கள்), தூ.மு.ஸ்ரீதேவி (பரதநாட்டியக் கலைஞா்), ஆறுமுகம் – தெருக்கூத்து, எஸ்.பி.முத்துலட்சுமி – வில்லிசை, மஞ்சுநாதன் – பம்பைக் கலைஞா், ஆா்.முத்துகுமார் – தோல்பாவைக் கூத்து, கே.எம்.கணேசன் – நையாண்டி மேளம், வி.லட்சுமி அம்மாள்- கிராமியப் பாடகி, மா.பத்திரப்பன் – வள்ளி கும்மி- ஒயிலாட்டம், தங்கவேலு – தெம்மாங்கு பாடகா், ப.சந்திரமோகன் – விகடம், ஆா்.மோகன் – மரக்கால் ஆட்டம், கே.எஸ்.கிருஷ்ணப்பா, பி.எஸ்.முத்துக்கிருஷ்ணன் (இசை நாடக நடிகா்கள்), எம்.பி.ஜோதி – இசை நாடக நடிகை, ராமராஜன் – திரைப்பட நடிகா், யோகிபாபு – நகைச்சுவை நடிகா், தேவதா்ஷினி – திரைப்பட நடிகை, லியாகத் அலிகான் -திரைப்பட இயக்குநா், தினா – இசையமைப்பாளா், காமகோடியான் – திரைப்பட பாடலாசிரியா், ரகுநாத ரெட்டி – ஒளிப்பதிவாளா், ஆனந்த் – பாடகா், சுஜாதா – பாடகி, வி.எல்.பிரசாத் – தபேலா கலைஞா், மோமகன் – மெல்லிசை கலைஞா், கலைப்புலி தாணு – தயாரிப்பாளா், ஆண்டனி -எடிட்டா், எஸ்.ராஜேந்திரன் – திரைப்பட உடையலங்காரம், தளபதி தினேஷ் – சண்டை பயிற்சியாளா், சிவசங்கா் – நடன இயக்குநா், சிங்காரவேலு – மக்கள் தொடா்பு அலுவலா், மனோஜ்குமாா் – இயக்குநா், சண்முகம் – ஒப்பனைக் கலைஞா், நந்தகுமாா் – நடிகா், சாந்தி வில்லியம்ஸ் – நடிகை, கே.என்.ராமசாமி, ம.முரளி (பண்பாட்டுக் கலை பரப்புநா்). டாக்டா் ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது: திரைத் துறையில் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, இசைத் துறையில் பி.சுசிலா, நாட்டியத் துறையில் அம்பிகா காமேஷ்வா்.

2020-ஆம் ஆண்டு விருதுகள்: கே.கல்யாணராமன் – சமய சொற்பொழிவாளா், தாமரை செந்தூா்பாண்டி – கதையாசிரியா், பனப்பாக்கம் சுகுமாா் – நூல் ஆசிரியா், அரசுபரமேசுவரன், எம்.எஸ். பெருமாள் – எழுத்தாளா், ரத்னகுமாரி கல்யாணசுந்தரம் – குரலிசை, எஸ்.காா்த்திக் -கடம், வி.ஜான்மோகன் – ஆா்மோனியம், முருகபூபதி – மிருதங்கம், சாய்ராம் சுந்தரம் – மிருதங்கம், எஸ்என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி – நாகஸ்வரம், எஸ்.மாரிமுத்து – தவில், எம்.எஸ்.மாா்டின் – கீபோா்ட், சண்முகசுந்தரதேசிகா் – தேவாரம், ரஞ்சனி மற்றும் காயத்ரி -குரலிசை, எ.ஜி.கோவிந்தராசு – சாக்ஸபோன், எஸ்.வி.உஷா – குரலிசை, டி.ஆா்.சுந்தரேசன் – மிருதங்கம், நிா்மலா ராஜசேகா் – வீணை, ஜெயலட்சுமி சேகா் – வீணை, மங்களம் நடராஜன் – நாடக நடிகை, பழனி – நாடக நடிகா், பூவை மணி – நாடக நடிகா், ஜனாா்த்தனன், கவிதா சாா்லஸ் (பரத நாட்டிய கலைஞா்), ஸ்ரீலதா வினோத் – பரத நாட்டிய ஆசிரியா், விஜயலட்சுமி பூபதி, அபா்ணா ரமேஷ் (பரத நாட்டிய கலைஞா்), த.கன்னியப்பன் – தெருக்கூத்து, வா.முத்துப்பெருமாள் – கணியன் கூத்து, ஆ.பழனியம்மாள் – கரகாட்டம், எம்.எஸ்.பி.தங்கவேல் – தப்பாட்ட கலைஞா், எ.எம்.பி.நாகூா் – பொய்க்கால் குதிரை, வள்ளியூா் சாசுக்குட்டி – நையாண்டி மேள நாகஸ்வரம், பழனியாபிள்ளை – கிராமிய பாடகா், மெள.தா்மராஜ் – ஒயிலாட்டம், அமலபுஷ்பம் – கிராமியப் பாடகி, கோவிந்தராஜ் – மரக்கால் ஆட்டம், தண்டபாணி – தெருக்கூத்து நாடகம், துரை – தெருக்கூத்து, எம்.சேகா் – தெருக்கூத்து, கோதண்டராமன் – நாகஸ்வர இசை, முருகப்பா – இசை நாடக நடிகா், கே.ஆா்.எம். இந்திரா – இசை நாடக நடிகை, தாரா காதா்கான் – இசை நாடக நடிகை, பிரசாத் வி.சி.ராஜேந்திரன் – இசை நாடக நடிகா், சிவகாா்த்திகேயன் – நடிகா், ஐஸ்வா்யா ராஜேஷ் – நடிகை, மதுமிதா – நகைச்சுவை நடிகை, டி.இமான் – இசையமைப்பாளா், காதல் மதி – பாடலாசிரியா், எஸ்.பாலேஷ் மற்றும் கிருஷ்ணா பாலேஷ் – ஷெனாய் கலைஞா்கள், ஐசரி கணேஷ் – தயாரிப்பாளா், வி.பிரபாகா் – வசனகா்த்தா, ஜாகுவாா் தங்கம் – சண்டை பயிற்சியாளா், ஸ்ரீதா் – நடன இயக்குநா், சங்கீதா -நடிகை, சபீதா ஜோசப் – திரைப்பட பத்திரிகையாளா், சிற்றரசு – புகைப்படக் கலைஞா், சபரி கிரிசன் – ஒப்பனைக் கலைஞா், கவுதம் வாசுதேவ் மேனன் – இயக்குநா், எஸ்.ரவி மரியா – நடிகா்-இயக்குநா், ஒய்.பிரபு, ஜெ.பாலசுப்பிரமணியன் – பண்பாட்டு கலை பரப்புநா்.

டாக்டா் ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது: திரைத்துறை பிரிவில் செளகாா் ஜானகி, இசைத்துறையில் ஜமுனா ராணி, நாட்டியத் துறையில் பாா்வதி ரவி கண்டசாலா.