October 20, 2021

கற்கும் திறனை அதிகரிக்க ‘தூங்கும் வகுப்பு’: சீனப் பள்ளிகளில் அறிமுகம்!

நாம் படுத்து உறங்கியதும் நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது.முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும்.உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக் கள், காது, இறுதியாக தோல் ஆகியவை தூங்கும். ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர் கேட்கும் உறுப்புகள், சுவை உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாக கண்கள் விழிப்படைகின்றன.இதை அறிந்த நியுயார்க்:ஹப் ஸ்பாட் என்ற பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் ஊழியர்கள் தூங்குவதற்காக அலுவலகத்தில் கட்டில், மெத்தை போட்டு, தூங்கும் அறையை ஏற்பாடு செய்திருப்பதுடன் அவர்களை அவ்வப்போது கோழித் தூக்கம் போடும்படி ஊக்கப்படுத்துகிறார்கள். இப்படி தூங்குவதால்தால் அங்குள்ள ஊழியர்களுக்கு அருமையான புதிய ஐடியாக்கள் வருகின்றன என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
jan 27 - health sleeping_childs
இதற்கிடையில் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளிடன் பகல்லே படுத்துத் தூங்காதே. கெட்ட பழக்கம், இதுவே பழக்கமாயிட்டா உடம்பு பெருத்துப் போகும்! என்ற வசனங்களை சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஆனால் நம்மை மீறி வரும் தூக்கத்தை உடனடியாக தழுவாமல் அலட்சியப் படுத்துவதான் பல்வேறு தவறுகள் ஏற்பட காரணமாகிறது. எனவே, குட்டித் தூக்கம் எனப்படும் கோழி தூக்கம் போட்டு எழுந்தால் உற்சாகம் ஏற்பட்டு, சுறு சுறுப்புடன் பணி செய்ய முடியும் என்கிறது பல்வேறு ஆய்வு முடிவுகள். இதற்கு இப்போது பிரபலமான நரம்பியல் துறை வல்லுநர்களும் முழு ஆதரவு தருகின்றனர்.இதைக் கருத்தில் கொண்டு சீன கல்வியாளர்கள், சோதனை முயற்சியாக மழலையர் வகுப்புகளில் (எல்.கே.ஜி., யூ.கே.ஜி.) படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டத்தில் தூங்கும் வகுப்பையும் சேர்க்கும்படி பரிந்துரைத்துள்ளனர்ர்.

உல்கம் முழுவதிலுமுள்ள பள்ளி வகுப்புகளின் இடையே பிள்ளைகள் சோர்வடைந்து விடுவதால், அவர்களால் உற்சாகத்துடன் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகின்றது.பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை தொடர்பாக கூர்ந்து கவனித்து வந்த சீன கல்வியாளர்கள், சோதனை முயற்சியாக மழலையர் வகுப்புகளில் (எல்.கே.ஜி., யூ.கே.ஜி.) படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டத்தில் தூங்கும் வகுப்பையும் சேர்க்கும்படி பரிந்துரைத்தனர்.

இதன்படி, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சுமார் 20 நிமிடங்களுக்கு மழலையர் வகுப்பு பிள்ளைகள் உறங்க வைக்கப்பட்டனர். இந்த புதிய திட்டம் கைமேல் பெரிய பலனை தந்துள்ளது. ஓய்வுக்கு பின்னர் கண் விழித்த பிள்ளைகள், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உற்சாகத்துடனும், அறிவுக் கூர்மையுடனும் படிப்பில் நாட்டம் செலுத்துவதை பார்க்க முடிந்தது.இதர மேல்வகுப்பு மாணவர்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்தலாமா? என்பது தொடர்பாக சீன அரசின் கல்வித்துறை அதிகாரிகள் தற்போது ஆலோசித்து வருவதாக் செய்திகள் வெளியாகியுள்ளது.