October 25, 2021

“கருவில் உள்ள குழந்தை ‘ஆணா?’ ‘பெண்ணா?'”- கட்டா யம் தெரிஞ்சுக்கணுமா?

இன்னும் சில மாதங்க்ளில் ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத் தை கண்டறிவது கட்டாயம் என்று சட்டம் வர வாய்ப்புள்ளது என்று அமைச்சர் மேனகா காந்தி தெரிவித் துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற அனைத்திந்திய மண்டல எடிட்டர்ஸ் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய மேனகா காந்தி, “இத்திட்ட மானது மத்திய அமைச்சர வையின் முடிவின் கீழ் உள்ளது, இதன் மூலம் பெண்சிசு கொலை முயற்சியை எளிதான முறையில் கண்டுபிடிக்க முடியும், மருத்துவ நடவடிக் கையில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கு பதிலாக புதிய முறையின் மூலம் கருவிலே யே பெண் குழந்தைகள் அழிக்கப்படுவதை தடுக்க முடியும் என்று குறிப்பிட்டு உள்ளார்.


edit feb 02

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை பதிவு செய்வதையடுத்து, கருவானது கலைக்கப்பட்டால் காரணத்தையும், மருத்துவ சான்றிதழையும் அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். மேலும் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் பதிவு செய்யப் படுவதை அடுத்து வீட்டில் பிரசவம் பார்க்கப்படும் முறைக்கும் முற்றுப்புள்ளியிட முடியும். வீட்டில் பிரசவம் பார்க்கையில் பெண் குழந்தையை கொலை செய்ய வாய்ப்பு உள்ளது. தடைகள் இருப்பினும் அதிகாரம் படைத்த சிலர் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதனை கலைத்து வருகிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே நிரம்பி வழியும் சிறைகளில் மேலும் பலரை அடைக்க விரும்ப வில்லை. அல்ட்ரா சவுண்ட் சோதனை மூலம் சட்டத்திற்கு புறம்பாக இதில் செயல்படுவோரை தொடர்ந்து கைது செய்ய முடியாது. கைது என்பது ஒரு நிரந்தரமான நடவடிக்கை அல்ல என்று மேனகா காந்தி குறிப்பிட்டு உள்ளார்.

இதனிடையே இது கூட கருவானது ஓரளவிற்கு வளர்ந்த பிறகே கண்டறிய இயலும். ஆனால் எந்த வித அறிவியல் வளர்ச்சியோ வசதியோ இல்லாத ஒரு கால கட்டத்தில், கரு உண்டான கணத்தில் குழந்தையின் பாலினத்தை துல்லியமாய் கணிக்கும் முறையினை அருளியிருக்கின்றனர் சித்தர்கள்.

ஆண், பெண், அலியாவது ஏன்?

“பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே”
(திருமந்திரம் 480)

ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என மூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.

குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
(திருமந்திரம் 482)

அது சரி, ஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில் பிறப்பதேன்? அதற்கும் திருமூலர் பதில் கூறுகிறார். விந்து வெளிப்படும்போது அபான வாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.

கருத்தரித்து விட்டது, நமக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்ப்பார்ப்பு டன் இருக்கும் தம்பதியினருக்கு அதிர்ச்சி தரும் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்? உடல் உறவின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், உடலுறவு கொள்ளும் போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம் என்கிறார் திருமூலர். மேலும் உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் சிறுநீர் அதிகமிருந்தால் கருத்தரிக்கும் குழந்தை ஊமையாக இருக்கும் என்கிறார். பெண்ணின் வயிற்றில் மலமும் சலமும் சேர்ந்து மிகுந்திருந்தால்குழந்தை குருடனாகவே பிறக்கும் என்றும் கூறுகிறார் மூலர். எப்படி?

“மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே
(திருமந்திரம் 481)

சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும் போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். ஆனால் ஆணின் சுவாசத்தின் நீளம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் தரிக்கும் குழந்தை முடமாகும் என்று கூறுகிறார். வெளிப்படும் சுவாசத்தின் நீளமும் திடமும்ஒருசேரக் குறைவாக இருந்தால் குழந்தை கூனாகப் பிறக்கும்.

“கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட் சரணங்கணாசி
வற்பணப் பிராணவாய்வு வலத்திலே யோடி லாணாஞ்
சிற்பன விடத்திலோடிற் சிறந்தது பெண்ணதாகும்
பிற்கர வுதயமாகிற் பிலமில்லாக் குருடு வூமை”
– அகத்தியர் –

கரு உண்டான காலத்தில் நாசியிலே ஓடுகின்ற சரம் அல்லது மூச்சுக் காற்றினை வைத்து கெர்ப்பத்தில் உதித்தது ஆணா , பெண்ணா என்பதை அறிந்திடும் முறையினை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்….

பிராண வாயு என்னும் மூச்சுக்காற்று வலது நாசியில் ஓடினால் கெர்ப்பத்திலிருப்பது பெண் குழந்தை எனவும், மூச்சுக் காற்றானது இடது நாசியில் ஓடினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும், மூச்சு காற்றோட்டமானது சீராக முழுமையாக இல்லாதிருப்பின் பிறக்கும் குழந்தை குருடு, ஊமை போன்ற குறைபாட்டுடன் பிறக்கும் என்கிறார்.

புலிப்பாணி சித்தர் தன்னுடைய பாடல் ஒன்றில் குழந்தை பிறக்கும் நாளை கணிக்கும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.

“சித்திரை பத்தாந் தேதியில் தூரம்
சென்றிடிலது முதற்பத்து வரையில்
பத்தாகு மதிலேழு சேரில் பதினேழ் தேதியில்
பகர்தறி தைமாதம் பதினேழ் தேதியிலே
ஆமாப்பா போகருட கடாட்சத்தாலே
தெளிவாகப் புலிப்பாணி பாடினேனே”
– புலிப்பாணி –

சித்திரை மாதம் பத்தாம் தேதியில் வீட்டுவிலக்கு நின்று விட்டால் அது முதல் பத்து மாதங்களை கணக்கு வைத்தால் தை மாதம் பத்து மாதமாகும், அந்த மாதத்தில் எழு நாட்களை சேர்த்துக் கொண்டால் தைமாதம் பதினேழாம் திகதி பிரசவிப்பாள்.

சித்திரை மாதம் பதினைந்து தேதிக்கு முன்னதாக மாதவிலக்கு நிற்கிறவர்களுக்கு பத்து மாதக் கணக்காகும்.

சித்திரை பதினைந்தாம் தேதிக்கு மேல் மாத விலக்கு நிற்கிறவர்களுக்கு பதினோரு மாதம் என்கின்ற கணக்கில் பார்க்கவேண்டும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.