September 17, 2021

கருத்து கணிப்புகளுக்கு தடை : தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம்!

கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டதை மீண்டும் உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளார் மிட்டல் எழுதியுள்ள கடிதத்தில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் கருத்துக் கணிப்பு விவகாரத்தில் உள்ள தடையை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
nov 3 - vote in india
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்திஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. டெல்லியிலும் பாரதீய ஜனதா கட்சிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று இதுவரை எடுக்கப்பட்ட எல்லா கருத்துக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன. இதே நிலை பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொளிக்கும் என்று கூறப்படுகிறது.

இது காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வெளிவந்தால், அது காங்கிரசின் வெற்றியை பாதிக்கும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து தலைமை தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் சட்டப்பிரிவு ஒரு கடிதம் எழுதியுள்ளது.

அதில் அவர்கள், ‘‘கருத்து கணிப்புகள் மக்களுக்கு தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்துகின்றன. அவை ஒரு சாராருக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளன. எனவே, அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.இது பற்றி தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து வருகிறது. எனவே, கருத்து கணிப்புகளுக்கு விரைவில் தடை அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Congress favours ban on opinion polls
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Congress has backed Election Commission’s views on restricting publication and dissemination of opinion polls during elections, saying the random surveys are “erroneous”, “lack credibility” and could be “manipulated” by vested interests.
The EC had last month sought views of various political parties on the issue of banning opinion polls after the government asked it to hold fresh consultations on the issue.