September 29, 2021

கருத்துக் கணிப்பு புருடாக்கள்!

ஒவ்வொரு தேர்தலின்போதும் கருத்துக்கணிப்புகள் என்று எல்லா தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் பீற்றிக் கொள்ளும். வேலை கெட்ட நாமும் அவற்றைப் பிடித்துக்கொண்டு இவந்தான் ஜெயிப்பான் அவந்தான் ஜெயிப்பான் என்று மோதிக்கொண்டிருப்போம். கட்சி ரசிகர்கள் தவிர, பிரணாய் ராய் ரசிகர்கள், ராஜ்தீப் ரசிகர்கள் என்றும் மோதிக் கொண்டிருப்போம். இதற்கிடையில் ஊடகங்கள் நன்றாகக் கல்லா கட்டும். இதுகுறித்து விவரமாக எழுத நிறையவே தரவுகள் சேர்த்திருக்கிறேன். ஆனால் எழுத நேரம் இருக்குமா என்று தெரியாது. அதனால், சுருக்கமாக கடந்த தேர்தலின் கருத்துக் கணிப்புகள் குறித்த அட்டவணை தந்திருக்கிறேன்.
edit - opinion poll
கணிப்பின்போது கேள்வி கேட்கப்பட்ட நபர்கள் எத்தனை பேர் என்று பார்த்தாலே போதும், இது எப்பேர்ப்பட்ட புரட்டு என்று தெரியும். 534 தொகுதிகள் கொண்ட இந்தியாவில், 81.4 கோடி வாக்களார்கள் கொண்ட நாட்டில், கருத்து கேட்கப்பட்டது குறைந்தது 16569 முதல் அதிகபட்சம் 54000 பேரிடம்தான். இதை வைத்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மக்களின் மனநிலையைக் கேட்டு விட்டதாப் பீற்றிக் கொள்வதுதான் கருத்துக் கணிப்புகள்.

இப்போதும் துவங்கி விட்டன. வாங்கிய காசுக்கு குலைக்கவும் வாலை ஆட்டவும் வேண்டாமா…

இதோ… கடந்த தேர்தலின் எல்லா கணிப்பு முடிவுகள். உங்கள் வசதிக்காக.

விருப்பமுள்ள நண்பர்கள் இதை பகிருங்கள். இனி வரும் நாட்களில் கருத்துக் கணிப்பு குறித்து நிறையவே விவாதங்கள் நடைபெறும். அவற்றை எதிர்கொள்ள எல்லாருக்கும் உதவியாக இருக்கும்.

Shah Jahan