October 22, 2021

கருணாநிதி மகள் கனிமொழி ஹாஸ்பிட்டலில் அட்மிட்!

திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழிக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.விசாரித்த போது அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது
kanimozhi
திமுக எம்.பி. கனிமொழி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து விசாரித்த பத்திரிகையாளர்களிடம் ‘அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேச பல மணி நேரமாக ஓய்வின்றி பேச வேண்டியதை தயார் செய்தார்.என்றும் பல மணி நேரமாக வேலை பார்த்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து தான் கனிமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்றும் தெரிவித்தனர்.

அதே சமயம் சீனியர் பத்திரிகையாளர் பா. ஏகலைவன்,”விஷம் அருந்திய செய்தி உண்மைதான். ஆழ்வார் பேட்டையில் இருக்கும் தனியார் இருத்துவமனையில் இருக்கிறார். அண்ணன் தம்பிகள் அனைவரும் சென்று வந்தபடி உள்ளார்கள். அழகிரி நீலாங்கரையில்தான் இருக்கிறார். அவரும் வந்து பார்க்க இருக்கிறார்…இப்போது பரவாயில்லை.செய்தி வந்தபோது வதந்தியோ என்ற குழப்பம். அவருடைய செல்பேசி தொடர்புக்கே சென்றேன். பதிலில்லை…..எப்படியிருந்தாலும் பத்திரிகையாள நண்பர்களிடம் நன்றாக பேசக்கூடியவர். நான் எப்போது தொலைபேசி எடுத்தாலும் பதிலை தருவார். பேட்டி என்றால் அப்பாவை கேட்டு சொல்லட்டுமா என்பார். சொன்னபடி பதிலையும் தருவார். மற்றவர்களை போல் இருக்கவில்லை…..எந்த பிரச்சனை என்றாலும் அது ஒரு புறமிருக்கட்டும்.அவர் நலம்பெற வேண்டும்…….” என்று தெரிவித்துள்ளார்.

1 thought on “கருணாநிதி மகள் கனிமொழி ஹாஸ்பிட்டலில் அட்மிட்!

  1. அவர் நலம்பெற வேண்டும்…….” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.