October 21, 2021

கருச்சிதைவு, கருக்கலைப்பால் இந்திய பெண்கள் அதிகம் பாதிப்பு: ஆய்வில் தகவல்

உலகில் உள்ள மற்ற நாடுகளை விட இந்திய பெண்கள் மீண்டும் மீண்டும் கருச்சிதைவால் பாதிக்கப் படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மும்பையை சேர்ந்த மகப்பேறியல் மருத்துவர் இதனை கண்டறிந்துள்ளார். 2,400 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 32 சதவீதம் பெண்கள் கருச்சிதைவால் பாதிக்கப் பட்டுள்ளது தெரியவந்தது. மருத்து வசதியில்லாமல் கருச்சிதைவு அல்லது தொடர்ச்சியாக கருக்கலைப்பு உலக அளவில் 10 சதவீதம் பெண்கள் மேற்கொள்கின்றனர் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ”தொடர்ச்சியான கருச்சிதைவால் இந்தியாவில் 7.46 சதவீதம் பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக மரபணு, வரலாற்று ரீதியான காச நோய் போன்றவற்றால் பெண்களின் கருப்பைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.” என்று ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.
abortion 1a
‘‘அபார்ஷன் என்பது மிகவும் சென்ஸிடிவ்வான ஒரு விஷயம். ஒரு பெண்ணுக்கு அபார்ஷன் உடல் அளவிலும், மனதளவிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. ஓர் உயிரை அழித்த குற்ற உணர்ச்சி, தாயின் அடிமனதில் உறுத்திக்கொண்டே இருக்கும். இந்தக் குற்ற உணர்ச்சி, நாளடைவில் ஸ்டிரெஸ்ஸாகக்கூட மாறலாம். ஒரு சில காம்ப்ளிகேஷன்களை ஏற்படுத்தக்கூடிய அபார்ஷன் ஒன்றும் சாதாரண விஷயமில்லை. எனவே, அபார்ஷன் என்ற முடிவை எடுக்கும் முன்பு நூறு தடவை யோசிப்பது நல்லது. இதைத் தடுப்பது அதைவிட நல்லது. அபார்ஷனால் ஏற்படும் காம்ப்ளிகேஷன் களைத் தெரிந்துகொண்டால், இதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு தானாகவே வரும்’’

‘‘கர்ப்பத்தை கணவனும், மனைவியும் சரியான நேரத்தில் பிளான் செய்யாததுதான் அபார்ஷனுக்கு முதல் காரணம். கருத்தரித்த பிறகு குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்ற டயலமாவிலேயே சில தம்பதிகள் இருப்பதுண்டு. இதனால் கடைசி நிமிஷத்தில் முடிவு எடுத்து அபார்ஷனில் கொண்டு நிறுத்தி விடுகிறார்கள். கருத்தரிக்கும் முன்பே குழந்தை அவசியமா? இல்லை தள்ளிப்போடலாமா என்று யோசித்து அதற்கான கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். கருத்தடை சாதனம் பயன்படுத்தாமல் கருத்தரித்து கணவனும், மனைவியும் தவிர்க்கமுடியாத காரணத்தினால் அதை கலைக்க முடிவெடுத்தால், இரண்டரை மாதத்திற்குள் கருக்கலைப்பு செய்து கொள்வதே பாதுகாப்பானது. கருக்கலைப்பு செய்து கொள்ளலாமா என்ற டயலமாவில், இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தை தவறவிட்டு, மூன்று மாதத்தில் கருக்கலைப்பு மருத்துவரை அணுகினால், காம்ப்ளி கேஷன்கள் அதிகமாகிவிடுகிறது.

சரி… கருக்கலைப்பினால் ஏற்படக்கூடிய சில பின் விளைவுகளைப் பற்றிப் பார்ப்போம்.* கருப்பையில் இரத்த கட்டிகள் (blood clots) ஏற்படக்கூடும்.

* கருப்பையிலும் அதைச் சுற்றியுள்ள இழைகளிலும் இன்ஃபெக்ஷன் ஏற்படலாம்..

* ஒரே கலைப்பில் கரு கலையாமல் மறுபடியும் கருக்கலைப்பு செய்ய வேண்டிவரும்.

* கருப்பை வாயில் (cervix) கிழிந்து போகலாம். ஆனால், இதை தையல்கள் மூலம் சரிசெய்து விடலாம்.

* கருப்பை சுருங்காமல் அதீத இரத்தப்போக்கு ஏற்படும். அதிகப்படியான இரத்தப்போக்கினால் உடல் பலவீனமாகிப் போகும்.

* கருக்கலைப்பு முழுமையாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை பதினான்கு நாட்கள் கழித்து ஸ்கேன் செய்து பார்க்கத் தவறினால், கர்ப்பம் தொடரும் வாய்ப்பு உண்டு.

கருக்கலைப்பு செய்து கொண்டபிறகு ஏற்படும் சில அறிகுறிகள், காம்ப்ளிகேஷன் இருப்பதை நமக்குச் சுட்டிக் காட்டும். அவை…

* அதிகப் படியான வயிற்றுவலி.

* காய்ச்சல்.

* பீரியட்ஸ் சமயத்தில் அதீத இரத்தப்போக்கு, ரொம்பவும் தாங்கமுடியாத அதிகப்படியான பிளீடிங் இருந்தால்,

* கருக்கலைப்பு செய்துகொண்டப் பிறகும் கர்ப்பத்தின் அறிகுறிகள் தொடர்வது.

இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.

கருக்கலைப்பில் நீங்கள் யோசிக்க வேண்டிய மற்றுமொரு விஷயமும் உண்டு. கல்யாணமாகி உண்டான முதல் கருவைக் கலைத்தால், அடுத்து குழந்தைப் பேறு அடைவதில் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதைச் சரிப்படுத்துவதில் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிவரும். அடுத்து, அடிக்கடி செய்யப்படும் கருக்கலைப்பினால் கருக் குழாயில் அடைப்புகள் ஏற்படலாம். ஒருமுறை கருக்கலைப்பு செய்துகொண்ட பின்பு அடுத்து ஆறு மாதங்கள் வரை கருத்தரிக்காமல் இருப்பதே பாதுகாப்பானது.சில நேரங்களில் கருக்கலைப்பு அவசியம் தேவைப்படும். தாய்க்கு இருதய நோய், டயாபடீஸ், ஹைபர்டென்ஷன், பிறப்பு உறுப்பில் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், எபிலெப்ஸி, கருத்தரித்த நாளிலிருந்து கண்ட்ரோல் பண்ணமுடியாத வாமிட்டிங், இதுபோன்ற கேஸ்களில், தாயின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவர்களே கருக்கலைப்புக்குப் பரிந்துரைப்பார்கள். இந்தச் சூழ்நிலையில் கருக்கலைப்புக்குச் சம்மதிக்காமல் போனால், தாயின் உயிருக்குப் பாதகமாகிவிடும். இதுபோன்ற கேஸ்களில் கர்ப்பத்தைத் தொடரவிட்டால், குழந்தை மனவளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் குன்றியே பிறக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்!
abortion
சிலருக்கு மெடிக்கல் முறைப்படி கருக்கலைப்பு செய்யாமல் தாமாகவே கருக்கலைந்துவிடும். இதை மிஸ்கேரேஜ் என்போம். இந்த கேஸ்களில் கருத்தரித்த இருபது வாரங்களுக்குள் கரு தானாகவே கலைந்துவிடும். பொதுவாக, மிஸ்கேரேஜ் ஏற்படக்கூடிய காரணங்கள் சில…

* நாற்பது வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பது.

* ஏற்கெனவே மிஸ்கேரேஜ் ஏற்பட்டிருப்பது.

* டயாபடீஸ், ஹைபோதைராய்டிஸம் போன்ற கேஸ்களில்.

* உடல் ஹார்மோன்களில் கோளாறுகள்.

* தாய்க்கு புகை, மது போன்ற பழக்கங்கள் இருந்தால்.

* கருப்பையின் ஷேப் சரியாக இல்லையென்றாலும், பொதுவாக கருப்பை வீக்காக இருந்தாலும் தானாகவே கர்ப்பம் கலையலாம்.

* தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், எதிர்பாராத விபத்துகளாலும் ஏற்படலாம்.

வெஜைனல் பிளீடிங், வயிற்றுப் பகுதியில் சதைப் பிடிப்பு, முதுகுத் தண்டின் அடிபாகத்தில் வலி, வலியில்லாமல் வஜைனா வழியாக சில செமி_சாலிட் விணீttமீக்ஷீ வெளியேறுவது போன்றவை மிஸ்கேரேஜ் ஏற்படுவதற்கு முன்பு தெரியும் சில அறிகுறிகள்.

வைட்டமின் பி சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், கருத்தரித்த பெண்ணின் உடல் நிலை சரியில்லையென்றால் ரொம்ப கவனமாக, ஸ்பெஷலாகப் பார்த்துக்கொள்வதன் மூலமும் தானாகவே கருக்கலைப்பு ஏற்படுவதை ஓரளவுக்குத் தடுக்கலாம்.

கருக்கலைப்பு செய்துகொள்வதில் குழப்பம் ஏற்பட்டால், கவுன்சிலிங் மையங்களை அணுகி தகுந்த கவுன்சிலிங் எடுத்துக்கொண்டால், கருக்கலைப்புப் பற்றி ஒரு தெளிவு கிடைக்கும். மருத்துவர்களும் பெரும்பாலும் கருவை தக்கவைத்துக் கொள்வதில்தான் கவுன்சிலிங் அளிப்பார்கள். இதையும் தாண்டி கருக்கலைப்பு செய்ய திட்டமிட்டால், கருக்கலைப்புக்கு அரசு அங்கீகரித்து, லைஸென்ஸ் பெற்ற மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துகொள்வதே சட்டப்படி சரியான முறை!