கரப்பான் பூச்சிகள் மூலம் புது வகை முயற்சி!

கரப்பான் பூச்சிக்கு இரு ’ மீசைகள்’ இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இவை உணர் உறுப்புகள் (Antennae) முன்புறத்தில் தடை ஏதேனும் உள்ளதா என்பதை கரப்பான் பூச்சி இந்த உணர் உறுப்புகள் மூலம் அறிந்து கொள்ளும்.இதே போல கரப்பான் பூச்சியின் பின்புறத்தில் வேறு வித உணர் உறுப்புகள் (cerci) உள்ளன. பின்புறத்திலிருந்து தன்னைப் பிடிக்க ஏதேனும் வருகிறதா என்பதை இந்த உறுப்புகள் கண்டறிந்து தெரிவிக்கும். நீங்கள் கரப்பான் பூச்சியை அடிக்க முயலும் போது அது இந்த உணர் உறுப்புகளை வைத்துத் தான் கண்டு கொள்கிறது.இப்படி இயற்கையிலேயே சென்சிட்டிவான கரப்பான் பூச்சிகளை வைத்து ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைகழகம் ஒரு புது வகை சென்சார்களை உருவாக்கியுள்ளது. இது மனிதர்கள் / அல்லது டெக்னாலஜி செல்ல முடியாத இடத்தில் கூட இந்த கரப்பான் பூச்சிகள் மூலம் தகவல்களை பரிமாறி கொள்ள உதவும் வகையில் அமைந்துள்ளது.
ravi -feb 4
கரப்பான் பூச்சிகளின் முதுகில் சென்சாரும் அதன் கூட 20mm x 15mm அளவுக்கு ஒரு ஃப்யூள் செல்லும் இனைக்கபட்டிருக்கிறதாம். இதெல்லாம் சரி இந்த சென்சார் எப்படி மின்சாரம் இல்லாமல் வேலை செய்யும் என கேட்கும் ஆட்களுக்கு – அது தான் கூறினேனே இதன் முதுகில் இந்த ஃபியூள் சென்சார் இருக்கின்றது என்று……..

இந்த ஃப்யூள் செல் வேலை செய்ய அந்த கரப்பான் பூச்சியின் உடலில் ட்ரஹலோஸ் (trehalose) என்னும் திரவம் மற்றும் ஒரு சிறிய ஊசியை செலுத்துவார்கள். இந்த திரவகம் உள்ளே எலக்ட்ரோட்ஸை உருவாக்கும்.அதன் மூலம் குளுகோஸ் கிடைக்கும் அதன் கூட‌ உள்ளே இருக்கும் ஊசி இந்த எலக்ட்ரோட்ஸ் மூலம் அனோட் /காத்தோடாக மாறி நிரந்திர மின்சாரம் அந்த சென்ஸார் உபயோகத்திர்க்கு வாழ் நாள் முழுவதும் கிடைக்கும்.

ஏற்கனவே சோதனை செய்த போது ஒவ்வொரு கரப்பான் பூச்சியும் 50.2μW மின்சாரத்தை தருகிறதாம். போற போக்கை பார்த்தால் இந்த கரப்பான் பூச்சியை வீட்ல வளர்த்து மொபைல் சார்ஜ்ல இருந்து மின்சார தேவைக்கெல்லாம் உபயோகபடுத்தும் அளவுக்கு வந்திரும் போல……………..!

வீடியோ லிங்க்:http://www.youtube.com/watch?v=gmbEX7zDzog

Cockroach can provide own electricity for a new type of sensors