September 27, 2021

கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 9 தொகுதிகளில் போட்டி; தொகுதிகள் அறிவிப்பு!

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தொகுதி பங்கீட்டு சிக்கல் காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக அறிவித்ததும்.இந்த 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன என்பதும் தெரிந்தநிலையில் வரவிருக்கும் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சிகள் தலா 9 தொகுதிகள் வீதம் மொத்தம் 18 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
cpi pressmeet
சென்னையில் இன்று கூட்டாக செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.என். ராமகிருஷ்ணன் ஆகியோர், போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்பதையும் தெரிவித்தனர்.

புதுச்சேரி, கடலூர், தூத்துக்குடி, தருமபுரி, திருவள்ளூர், தென்காசி, நாகை, தூத்துக்குடி, கடலூர், திருப்பூர் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

அதேப்போன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை, கன்னியாகுமரி, வடசென்னை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது.