September 23, 2021

கமிஷன் போட்டு எம்.பி.கள் சம்பளத்தை அதிகரிக்க மத்திய அரசு பிளான்!

அரசியல் சாசனத்தின் பிரிவு 106–ன் கீழ், நமது நாட்டில் எம்.பி.க்கள் சம்பளம் 1954–ம் ஆண்டு இயற்றப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம், படிகள், ஓய்வூதிய சட்டத்தின்படி நிர்ண யிக்கப்படுகிறது. தற்போது எம்.பி.க்களுக்கு அடிப்படை சம்ப ளமாக மாதம் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.உலக நாடுகளில், இஸ் ரேல்தான் எம்.பி.க்களுக்கு அதிகபட்சமாக மாதம் ஒன்றுக்கு ரூ.6 லட்சத்து 16 ஆயிரத்து 675 சம்பளம் வழங்குகிறது. ஆப்பிரிக்க நாடான துனிசியாவில்தான் குறைந்தபட்ச சம்பளமாக ரூ.7 ஆயிரத்து 952 வழங்கப்படுகிறது.
m p salary
இந்நிலையில் எம்.பி.க்களின் சம்பளத்தை உயர்த்துகிறபோது அது பெருமளவு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்துகிறது.இதை தவிர்க்கிற விதத்தில் எம்.பி.க்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து பரிந்துரை செய்வதற்கு 3 நபர்களை கொண்ட சுதந்திரமான சம்பள கமிஷனை அமைப்பதற்கு மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நடை பெற உள்ள அகில இந்திய கொறடாக்கள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.இந்த மாநாட்டுக்கு மத்திய பாராளுமன்ற விவ காரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமை தாங்குகிறார்.

இந்த மாநாட்டு நிகழ்ச்சி நிரல் குறிப்பினை மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. அதில், “பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், படிகள் குறித்து சிபாரிசு செய்வதற்காக 3 நபர்களைக் கொண்ட சம்பள கமிஷன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் எம்.பி.க்கள் தங்கள் சம்பளத்தை தாங்களே உயர்த்திக்கொள்கிறார்கள் என்று கூறி பொதுமக்கள் கண்டனம் தெரி விப்பதில் இருந்தும், ஊடகங்கள் விமர்சனம் செய்வதில் இருந்தும் விடுபடலாம்.

நமது ஜனநாயகத்தின் பிரதிநிதிகள் என்ற வகையில், எம்.பி.க்களின் மிகப்பெரிய பொறுப்புக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள சரியான வாய்ப்பினை வழங்கும். இந்த கமிஷன், எம்.பி.க்களின் சம்பளத்தை நியாயமானதாக, வெளிப்படையானதாக, நேர்மையான வழியில் உறுதி செய்யும். இந்த கமிஷன் அமைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படுகிறபோது, அதற்கேற்ற வகையில் 1954–ம் ஆண்டு இயற்றப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம், படிகள், ஓய்வூதிய சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்”என்று அதில் கூறப்பட்டுள்ளது.