September 18, 2021

கனடாவில் உள்ள தெருவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர்!

கனடா நாட்டின் மர்கம் நகரில் உள்ள தெருவிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரிடப்பட்டுள்ளது.இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு கனடாவில் உள்ள மர்கம் நகரில் உள்ள தெருவிற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்நகரில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது என்பது குறி்ப்பிடத்தக்கது.
nov 5 - a r rahman st
இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் தொடங்கிய விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சாதனைகளை போற்றி புகழாரம் சூட்டப்பட்டது.பின்னர், மர்கம் பகுதியில் உள்ள பிரதான தெரு ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்(அல்லாஹ் – ரக்ஹா ரஹ்மான்) தெரு என பெயர் சூட்டப்பட்டது.