October 18, 2021

கத்தி ரிலீஸ் கன்ஃபார்ம்! இன்று முதல்(19-10-2014) முன்பதிவு ஆரம்பம் !

இளைய தளபதி + ‘அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்’ என்று சொல்லிக் கொள்பவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் கத்தி. துப்பாக்கியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இணைந்திருக்கும் படம், என்பதாலே இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. முதலில் படம் தீபாவளியை முன்னிட்டு அக் 22ம் தேதி தான் திரைக்கு வரும என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களாக படம் தீபாவளிக்கு முன்னதாகவே அதாவது நாளை(அக் 17) ரிலீசாக இருப்பதாக செய்திகள் பரவின.இதனால், கத்தி படம் தீபாவளிக்கு வருமா? அல்லது அதற்கு முன்னரே வருமா? என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. மேலும் திருமா உள்ளிட்டோர் இதன் ரிலீஸை எதிர்த்து வந்ததால் மேலும் குழப்பம் நீடித்தது
katthi oct 19
இதனிடையே தற்போது இந்த குழப்பத்திற்கெல்லாம் தயாரிப்பாளர் கருணாகரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.இதுகுறித்து அவர் கத்தி படத்தை” தீபாவளிக்கு முன்கூட்டியே வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை. தீபாவளியன்றுதான் வெளியிடுகிறோம். மேலும் இந்தப் படம் இந்தியாவில் 1000 தியேட்டர்களிலும் வெளிநாடுகளில் 500 தியேட்டர்களிலும் வெளியாக உள்ளது. தற்போது அதற்கான ஏற்பாடுகளில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம்” என்றார்.

இதன் மூலம் கத்தி படம் தீபாவளியன்றுதான் திரைக்கு வரவிருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கத்தி படம் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டதட்ட 500 திரையரங்குகளில் திரையிடப் பட உள்ளது. இதுவொரு புறமிருக்க தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ளநிலையில் கத்தி படத்தின் செல்பிபுள்ள பாடலின் வீடியோ புரமோ ரிலீசாகி இணையத்தில் கலக்கி கொண்டுள்ளது.ரிலீஸ் ஆகும் தியேட்டர்களும் அறிவிக்கப்பட்டு விட்டது. அத்துடன் இன்று ( SUNDAY-19-10-2014) முதல் முன்பதிவும் தொடங்குகின்றது.

லேட்டஸ்ட் டிரைலர் பார்க்க:;http://www.youtube.com/watch?v=bMf0IyzyKt4