October 16, 2021

கடவுள் ஒரு மந்திரவாதியல்ல…Big Bang என்கிற பெருவெடிப்பில் உருவானதே உலகம்…! போப் பிரான்சிஸ்!

ரோமில் நடந்த ஒரு கூட்டத்தில் போப் பிரான்சிஸ் உரையாற்றும் போது” கடவுளும் அறிவியல் கொள்கையும் முரண்பட்டது அல்ல.பிரபஞ்சம் உருவான பெருவெடிப்பு கொள்கை சரியானது, பரிணாம வளர்ச்சி கொள்கையும் சரியானது தான், எனவே மந்திரக்கோலுடன் வந்த மந்திரவாதியல்ல கடவுள்”என்றெல்லாம் பேசி பலரையும் யோசிக்க வைத்துள்ளார்..
Francis-Pope-
அதாவது,”ஆயிரத்து 300 கோடி ஆண்டுகளுக்கு முன் பிக் பேங் எனப்படும் பெருவெடிப்பில் உருவானதே இந்த பிரபஞ்சம் மேலும் உயிரினம் படிப்படியாக மாற்றம் பெற்றே வளர்ச்சி கண்டுள்ளது என்கிற கருத்து உண்மை” எனத் தெரிவித்துள்ள போப் பிரான்சிஸ் ”அதேசமயம் இந்தக்கோட்பாடு கத்தோலிக்க போதனைகளோடு முரண்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பிரபஞ்ச உருவாக்கம் பற்றிய ஆய்வு செய்கின்ற அறிவியல்கூட கடவுள் என்ற கருத்தை ஒதுக்கித்தள்ளவில்லை என்றும் போப் தெரிவித்துள்ளார்.

பிரபஞ்ச உருவாக்கம் பற்றி பைபிளில் சொல்லப்பட்டதே சரி என்று ஆணித்தரமாகக் சொல்லிவந்த சர்ச் நிர்வாகங்கள் ஒருகாலத்தில் பிரபஞ்ச ஆரம்பகால அறிவியல் விளக்கங்களை எதிர்த்தே வந்தது குறிப்பிடத்தக்கது. உதாரணம், சூரியனை பூமி சுற்றிவருகிறது என்று 17 ம் நுற்றாண்டில் சொன்ன கலிலியோ கலிலீக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது சர்ச் நிர்வாகங்கள். இத்தகைய சூழ்நிலையில் போப் பிரான்சிசின் இந்தக் கருத்து உலகம் முழுவதும் ஒரு புதிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

தகவல் – விஷ்வா