October 25, 2021

கடத்தப்பட்ட பெண்கள் -சிறுமிகளை தீவிரவாதிகளுக்கு பரிசாக வழங்கும் ஐ எஸ்! – ஐ. நா ஷாக்

”ஈராக் சிரியாவில் உள்ள 500க்கும் பேற்பட்ட யாஷ்தி, மற்றும் சிறுபான்மை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்களை ஐ.எஸ் தீவிரரவாதிகளுக்கு பரிசாக வழங்கபட்டு உள்ளன. அல்லது கள்ள சந்தையில் விற்பனை செய்யபட்டு உள்ளன. பெண்கள் மற்றும் சிறுமிகள் விலை குறிப்புகளுடன் விற்கபடுவார்கள் ” என ஐநா சபையின் மனித உரிமை ஆணையம் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
is child oct 5
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் கட்டுபாட்டில் வைத்து உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்.அந்த பகுதிகளை இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். அவர்கள் மீது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளும் வான் வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்லாமிய அரசை சேர்ந்த குழுக்கள் சிரியா மற்றும் ஈரக்கில் இருந்த கடத்தப்பட்ட பாலியல் அடிமைகளாக விற்பனை செய்கிறார்கள்.இதுவரை 500க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு கொடுக்கபட்டு உள்ளனர். அல்லது கள்ள சந்தையில் விற்பனை செய்யபட்டு உள்ளனர். என கடந்த வியாழக்கிழமை ஐநா மனித உரிமை கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறபட்டு உள்ளது.

பாதிக்கபட்ட 500க்கும் மெற்பட்டவர்களை சந்தித்து தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில்,”பெண்கள் மற்றும் சிறுமிகள் விலை குறிப்புகளுடன் விற்கபடுவார்கள் அவர்களை வாங்குபவர்கள் விலைபேசி வாங்கி கொள்ளலாம்.இவ்வாறு வாங்குபவர்கள் உள்ளூர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் என கூறப்பட்டு உள்ளது.