March 22, 2023

கசடதபற – ஓடிடி எனப்படும் சின்னத்திரை விமர்சனம்!

கதை சொல்வது பெரும்பாலானோருக்கு எளிது. ஆனால் கதைக்குள் கதை அல்லது வெவ்வேறு கதைகளை ஒரே கதையாக சொல்வதற்கெல்லாம் எக்ஸ்ட்ரா மூளை வேண்டும். அப்படியே சொன்னாலும் அக்கதையை ஒரு சினிமாவாகக் காண்பிப்பது என்பது இயக்குநருக்கு பெரும் சவாலாக இருக்கும்.. அந்த சவாலில் ஜெயித்து இருக்கிறார் கசடதபற என்ற படம் மூலம் சிம்புதேவன்.. அதிலும் நம்மக் கட்டிங் கண்னையாவின் தோழன் ஒருவர் சொன்னது போல், ‘ஆறுத் தனித்தனி கதைகளாகவும் சரி, அவை ஒட்டுமொத்தமாக ஓரே கதையாகத் தெரிவதிலும் சரி, கதைத் தேர்வில் இயக்குநர் காட்டிய அக்கறை தெரிகிறது. கையில் எடுத்துக் கொண்ட விஷயத்தில் தனது அதிமேதாவித்தனத்தைக் காட்ட நினைக்காமல் அனைவருக்கும் எளிமையாகப் புரியும் விதத்திலேயே கையாண்டது இந்தப் படத்தின் அடுத்த சிறப்பம்சம். எதேச்சையாக இவ்வளவு விஷயங்களா நடக்கும் என்று நம்மைக் கேள்வி கேட்க வைக்காமல் அனைத்தும் இயல்பாக நடக்கும் சம்பவங்களே என்று நம்ப வைத்ததே பெரிய வெற்றி. அங்கங்கு தெளித்திருக்கும் நகைச்சுவை வசனங்களும், நகைச்சுவையாளர் சிம்புதேவன் இன்னும் தொலைந்து போகவில்லை என்பதைக் காட்டியிருக்கிறது

முழு விமர்சனம் விரைவில்.