September 18, 2021

ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரி: ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கல்லூரியை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார்.மேலும், தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறைக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடங்களையும் அவர் திறக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்து உள்ளனர். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தொடங்கப்படும் புதிய மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்றே தொடங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவ கல்லூரிகளில், முழுவதும் குளு, குளு வசதி செய்யப்பட்ட முதல் கல்லூரி என்ற பெருமையை இந்த புதிய மருத்துவ கல்லூரி பெறுகிறது.
new med colleage
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டது.அந்த மருத்துவமனையின் மற்றொரு பகுதியில் ரூ.212 கோடி செலவில் புதிய மருத்துவ கல்லூரி கட்டும் பணியும் தொடங்கப்பட்டது. மொத்தம் 7 மாடிகளை கொண்ட 7 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக, 3 கட்டிடங்களில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நிர்வாகப் பிரிவுகள் ஆகியவை செயல்பட உள்ளன.

இந்த புதிய மருத்துவ கல்லூரிக்கான அனுமதியை இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கி இருக்கிறது. மாணவர் சேர்க்கைக்காக 100 இடங்களை தமிழக அரசு நிர்ணயம் செய்து உள்ளது. புதிதாக செயல்பட உள்ள இந்த மருத்துவ கல்லூரி, தமிழகத்தில் தொடங்கப்படும் 20-வது அரசு மருத்துவ கல்லூரி ஆகும்.இந்த மருத்துவ கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. 2 கட்டங்களாக நடந்த கலந்தாய்வில் மாநில அரசின் ஒதுக்கீட்டில் 85 இடங்கள் நிரப்பப்பட்டன.மாணவர் சேர்க்கை முடிவடைந்த நிலையில், புதிய மருத்துவ கல்லூரி இன்று முதல் செயல்படதொடங்குகிறது