August 2, 2021

ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவரானார் பி.சி.ஸ்ரீராம்

அண்மையில் நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து புதிய நிர்வாகிகள் தங்கள் பணிகளை தொடங்கி உள்ளனர். அடுத்து ‘சிகா ‘ எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது . சிகாவில் மொத்தம் 1300 பேர் இருந்தாலும், அதில் 913 பேர் மட்டுமே வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆந்திராவில் 120 பேர், கர்நாடகாவில் 60 பேர், கேரளாவில் 40 பேர் உள்ளனர்.
sica-winners-480x250


இதுவரை தலைவராக இருந்த என்.கே. விஸ்வநாதன் மற்றும் செயலாளர் ஃபெப்சி சிவா ஆகியோர் மீது, ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, 8 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சங்கத்தின் வரவு செலவுகள் முறையாக நடக்க வேண்டும்,வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. இந்த தேர்தலில் தற்போது பதவியில் உள்ளவரான ஜி.சிவா தலைமையில் ‘சேவை அணி’, பி.சி.ஸ்ரீராம் தலைமையில் ‘நடுநிலைஅணி’, கே.வி.கன்னியப்பன் தலைமையில் ‘ஆண்டவர்அணி’ என்று 3 அணிகள் போட்டியிட்டன

இதில் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான ‘நடுநிலை அணி’ வெற்றி பெற்றது என அறிவிக்கப் பட்டது. மொத்தம் 555 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற பி.சி.ஸ்ரீராம் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பொது செயலளாராக போட்டியிட்ட கண்ணன் 443 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இளவரசன், பாலமுருகன் உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளனர்.