September 23, 2021

ஒலி மாசுபாட்டால் உடல் மற்றும் உளரீதியான நோய்கள்!

மாசு நிறைந்த நீர் நிலம் காற்று ஆகியவற்றால் உடல் ஆரோக்கியம் எப்படிக் பாதிக்கப்படுகிறதோ அதற்கு இணையாக ஒலி மாசு உடல் நலத்தையும் பாதிக்கும் என்பதனை உணராவிட்டால் உடல் உறுப்புகள் நிரந்தரமாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.ஓலியற்ற வாழ்வை நம்மால் கற்பனை செய்ய முடியாது. அதே நேரத்தில் ஒருவருக்கு விருப்பமான ஒலி மற்றவருக்கு விரும்பத்தகாததாக இருக்கலாம்.இதில் சப்தம், ஓசை, இரச்சல், கூச்சல், உருமல் ஆகிய விதங்களில் வெளிப்படும் ஒலிகளில் எது மனித உடலையும் உள்ளத்தையும் பாதிப்படையச் செய்கிறதோ அது ஒலி மாசாக கருதப்படுகிறது.ஆனால் பெரும்பாலானோர் சப்தம் நம்மை செய்யும் என்றே கருதுகின்றனர். இதில் இளைஞர்களின் விருப்பம் இவ் விடயத்தில் மோசமாக உள்ளது.அதிக ஒலியே இன்பம் தரும் என்ற தவறான எண்ணத்தில் மின்னனு ஒலியால் கவரப்பட்டு அதில் மயங்கிக் கிடக்கின்றனர் இன்றைய இளைர்கள்!இதனிடையே இந்த ஒலி மாசுபாட்டால் உடல் மற்றும் உள ரீதியான நோய்கள் உருவாவதாக ஆய்வாளர்கள் மறுபடியும் உரத்தக் குரலில் தெரிவித்து உள்ளனர்.
noise-pollution- alert
ஒலி மாசைக் கட்டுப்படுத்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது செவித்திறனின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு இயக்கத்தின் போதும் வெளியாகும் ஒலியின் அளவு அதன் தீவிரம் குறித்து வகுக்கப்பட்டுள்ளது.உலக சுகாதார மையம் இதுக் குறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையில் உலகில் 5 சதவீத சிறுவர்கள் (10 வயதிற்கு உட்பட்டோர்) ஒலி மாசு காரணமாக கேட்புத்திறன் இழந்துள்ளதாகவும் 85 டெசிபல் இரைச்சல் சூழலில் பலரும் காது, இரைச்சல், தலைவலி, அயர்ச்சி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்டோமொபைல் தொழிலகங்களில் பணிபுரிவோரில் நான்கில் ஒரு பங்கினர் கேட்கும் சக்தியை இழக்கத்தூண்டும் இரைச்சலால் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

மேலும் 90 டெசிபலுக்கு மிகையான இரைச்சலால் சூழலில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு செவிப்புலன் அயர்ச்சி ஏற்படுகிறது.
அமெரிக்காவில் ஒலி மாசினால் 10 சதவீதத்தினர் செவித்திறனை இழப்பதாகவும் ஏறத்தாழ 8 கோடி மக்கள் ஒலி மாசினால் பாதிக்கப்படுவதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது

மேலும் 1000 பேருக்கு 35 பேர் எனும் வீதத்தில் காது இரைச்சல் நோயால் பாதிப்படைவதாகவும் நம் நாட்டில் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களில் 10 வீதத்தினரும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 7 சதவீதத்தினரும் கேட்கும் திறன் குறைந்தவர்களாகவே உள்ளனர் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.அதிக ஒலி ஒரு மனிதனை நிம்மதியாக உறங்க விடுவதில்லை குறைவாக ஒலியும் மூளையின் முக்கிய மையங்களை பாதித்து இயல்பான உறக்கத்தை குலைத்துவிடுகிறது.

நரம்புத்தளர்ச்சி மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் அதிக ஒலியையோ எதிர்பாராத சப்தத்தையோ கேட்க நேரிட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்றும் இரைச்சல் தொடர்ந்தால் அதுவே மனிதனின் இறப்புக்கு வழிகோலும் என்றும் முன்னரே எச்சரிக்கை செய்திருந்தனர்..

இந்நிலையில் இது குறித்து டெல்லி ராஜ்தானி கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியர் சஞ்சய் குமார் கூறும்போது, ‘வாகன போக்குவரத்து, தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் உள்ள தொலைக்காட்சி, ரேடியோ உள்ளிட்ட பொருட்கள் ஒலி மாசுபாட்டுக்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. மனிதர்கள் வழக்கமாக கேட்கும் ஒலியை விட அதிக அலைவரிசையை கேட்க நேரும் போது, உட்புற காது சவ்வு பாதிக்கப்படுவதுடன், குமட்டல், மயக்கம் போன்ற உபாதைகளும் ஏற்படுகிறது’ என்றார்.

மேலும் ஒலி மாசுபாட்டால் ஏற்படும் உளரீதியான பாதிப்புகள் குறித்து அவர் கூறும்போது, எரிச்சலூட்டும் அதிக ஒலிகளால் கேட்கும் திறன் பாதிக்கப்படுவதுடன், அசவுகரியம், வேலைத்திறன் குறைவு, கவனம் சிதறுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவித்தார்.டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் விமானங்களின் இரைச்சலால், ஒலி மாசுபாடு மேலும் அதிகரிப்பதாகவும் சஞ்சய் குமார் கூறியுள்ளார்.