September 17, 2021

ஒலி அலை அதிர்வு மூலம் இருதய நோய்க்குச் சிகிச்சை!

உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமானது இரத்த ஓட்டம். இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இரத்தத்தை சுத்திகரிப்பதில் இருதயம் முக்கியப் பங்காற்றுகிறது.சுவாசத்திற்கும், இருதயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இருதயத்தின் இரத்த ஓட்டமானது, அதன் தமனி மற்றும் இரத்தநாளங்களின் தன்மையைப் பொருத்து சீராக அமையும்.
வயதானவர்களுக்கு இருதயம் தடிப்பாகவும் கால்ஷியம் படிவம் அதிகம் நிறைந்ததாகவும் காணப்படுவது இயல்பு.உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைப்பழக்கம், மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றாலும் இருதயத்துக்குப் பிரச்னை ஏற்படுகிறது.இருதய நோய்களைப் பொருத்தவரை ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை. நோய் அதிகமாகும்போது கால்களில் வலி, மரத்துப் போதல், கால் வீக்கம், கைகளில் வலி போன்றவை ஏற்படக்கூடும்.இந்நிலையில் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு, உடல் தகுதி யின்மை மற்றும் வேறு காரணங்களால் சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கு புதிய அதிநவீன ஒலி அலை அதிர்வு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
heart
நெஞ்சுவலி, மாரடைப்பு, இருதய செயலிழப்பு, ரத்தநாள அமைப்பு பிரச்சினைகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் மற்றும் இஇசிபி சிகிச்சை முறைகள் நடை முறையில் உள்ளது. இத்தகைய சிகிச்சையினால் இருதய ரத்தகுழாய் அடைப்புகள் சரி செய்யப்பட்டு இருதய ரத்த ஓட்டம் அதிகரிக்கப்படுகிறது.ஆனால், உடல் தகுதியின்மை, சிறுநீரக கோளாறு, இருதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு மேற்கூறிய சிகிச்சை முறைகள் செய்ய முடிவதில்லை. மேற்கூறிய பிரச்சினை உள்ளவர்கள், பைபாஸ், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து மீண்டும் நெஞ்சுவலி, மூச்சு திணறல் உள்ளவர்கள் நவீன ஒலி அலை அதிர்வு சிகிச்சை செய்யலாம்.

இச்சிகிச்சையானது பாதிக்கப்பட்ட இருதய தசைகளின் மீது கட்டுப்படுத்தப்பட்ட ஒலி அலை அதிர்வுகளை செலுத்துவதன் மூலம் புதிய நுண்ணிய ரத்த நாளங்களை உருவாக்கி தடைபட்ட ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.இந்த சிகிச்சை முறையில் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. மயக்க மருந்து கிடையாது, வலி இல்லை, உடலினுள் எந்தவிதமான மருந்துகளோ, ஊசியோ செலுத்துவது இல்லை. இந்த சிகிச்சை முறையில் இருதயத்தில் எந்த பகுதிக்கு சிகிச்சை அளிக்கவேண்டுமோ அந்த இடத்தை கணினி மற்றும் இருதய ஸ்கேன்மூலம் பதிவு செய்து அந்த இடத்தில் ஒலி அலை அதிர்வு சிகிச்சை கருவியை உடலின் மேல் மார்பு பகுதியில் பொருத்தி ஒலி அலை அதிர்வுகள் செலுத்தப்படுகிறது.

ஒலி அலை சிகிச்சையின்மூலம் பலன் பெறும் இருதய நோயாளிகள் முன்பு போல் அதிக மருந்துகள் சாப்பிட வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட இருதய தசைகள் புத்துயிர் பெறுகிறது. இதனால், நோயாளிகள் மூச்சு திணறல், நெஞ்சுவலி குறைகிறது மற்றும் நடக்கும் திறன் அதிகரிக்கிறது.இந்த சிகிச்சையை தொடர்வதற்கு முன்பு நோயாளிகள் இருதய மற்றும் ஒலி அலை அதிர்வு சிகிச்சை நிபுணரை சந்தித்து அவரது ஆலோசனைப்படி இருதய ரத்த நாளங்கள், தசைகள் மற்றும் செயல்திறனை கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தபடுகிறார்கள்.

அதன்பின்னர் நோயாளிகளின் பரிசோதனை முடிவுகள் மருத்துவரால் ஆய்வு செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படவேண்டிய இருதய தசை பகுதிகள் கண்ட றியப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நோயாளிகளின் தன்மைக்கேற்ப இச்சிகிச்சை அளவு முடிவு செய்யப்படுகிறது என்கின்றனர் இருதய சிகிச்சை நிபுணர்கள்.

Read more: http://www.viduthalai.in/home/viduthalai/medical/92882-2014-12-15-09-54-18.html#ixzz3MJ1OjqZD