September 18, 2021

ஒரே டி வியில் இரண்டு பக்கமும் பார்க்கலாமே!

இப்போது ஒரு டி வி.க்கு இரண்டு ரிமோட் இருப்பது சகஜமாகி விட்டது. இந்நிலையில் ஒரு டி வி இரு பக்கங்களிலும்- அதாவது முன்னும், பின்னும் திரை இருந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு டிவியை எல்ஜி நிறுவனம் உருவாக்கியே விட்டது. தற்போது பெர்லினில் நடைபெற்ற சர்வதேச மின்னணுப் பொருள்களுக்கான கண்காட்சியில் இந்த டிவியை எல்ஜி நிறுவனம் அறிமுகப் படுத்தியிருக்கிறது.
l g t v
திரையின் அகலம் 111 அங்குலம், 55 அங்குலம் என இரண்டு வகைகளில் இந்த டிவி உருவாக்கப்பட்டிருக்கிறது. 55 அங்குல அகலம் கொண்ட டிவியின் தடிமன் வெறும் 5.3 மில்லிமீட்டர் மட்டுமே. எச்டி ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ள இந்த டிவியை அதன் இரு பக்கங்களிலிருந்தும் இருவர் ஒரே நேரத்தில் பார்க்க முடியும். இப்போதைக்குச் சோதனை முயற்சியாகத்தான் உருவாக்கியிருக்கிறார்கள்.இது சந்தைக்கு வர எவ்வளவு நாள் ஆகுமென்று தெரியவில்லை. இந்த டிவி வீடுகளுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ பெரிய பெரிய ஷாப்பிங் மால்களிலும் வர்த்தக வளாகங்களிலும் விளம்பரங்களுக்கு பெரிது உதவியாக இருக்கும் என்று நம்பலாம்!