October 21, 2021

ஒரு ஆள் முதல் – 300 கோடி வரை பறக்கும் விமானப்பயணத்திற்கு- 100 வயது!

ஜனவரி 1914 ஆம் ஆண்டு தான் முதல் முதல் விமான பயணம் ஆரம்பித்தது. பி ஈ ஃபான்ஸ்லர் என்ற அமெரிக்கர் முதன் முதலாய் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டூ டாம்பா நகரத்துக்கு வழக்கமாய் ஆகும் ஒன்னரை நாள் பயணத்தை 20 நிமிடத்தில் கடல் மார்க்கமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து காண்பித்தனர். இதில் முதன் முதலாய் பயணித்தவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மேயர் ஆப்ரகாம் சீ ப்ஹெல். அந்த ஒற்றை மனிதனின் பயணம் தான் இன்று உலகில் எந்த ஒரு நாளும் தினமும் 80 லட்சம் எங்காவது பறந்து கொண்டே உள்ளனர்.
jan 31 - ravi
2013 ஆம் ஆண்டு முதன் முறையாக 300 கோடி பேர் பறந்து அதிக சாதனை படைத்துள்ளனர். இதன் பின்பு ஃபோர்ட் மோட்டார்ஸ் தான் (இரண்டாவது படத்தல் உள்ள ஃபோர்ட் டிரை மோட்டார் என்னும் விமானத்தை தயாரிக்க ஆரம்பித்தது. இந்த விமான போக்குவரத்தில் பெரிய மாற்றம் மற்றூம் புரட்சியை ஏற்படுத்தியது சோவியத் யூனியனாக இருந்த ரஷியா. இவர்கள் தான் முதன் முதலாக இரண்டு விமான எஞ்சின்களை கொண்ட ரஷியன் சிக்ரோஸ்கை என்னும் விமானத்தை (மூன்றாவது படம்) 16 பேர் அமர்ந்து செல்லுமாறு வடிவமைத்து இல்லாமல் பிரைவேட் கேபின் மற்றூம் கழிப்பறை வசதியுடன் செய்த முதல் விமானமாகும். ஆனாலும் இது வரை மரம் / கேன்வாஸ் முதற்கொண்டே செய்த விமானங்களை மாற்றி அமைத்தது டக்லஸ் டிசி 03 என்னும் மெல்லிய உலோகத்தால் கொண்ட விமானம் தான் கொஞ்சம் உயர மேகங்களுக்கு மேல் பறக்கவும், டர்புலன்ஸை சமாளிக்கவும் உதவிய உலோக பிளேன் ( நான்காவது படம்). 1935ல் கொஞ்சம் கொஞ்சமாக விமான பயணம் ஒரு ஆர்கனைஸ்டு இன்டஸ்ட்ரியாக உருவாகிய நேரத்தில் தான் இரண்டாம் உலக போர் உருவாகி விமானங்கள் வெறூம் போர் கருவிகளாய் உருவெடுத்தது.

அதன் பின்பு 1950களில் பிரிட்டனின் டி ஹாவிலேன்ட் காமெட் தான் உலகத்தின் முதன் முதல் ஜெட் எஞ்சின் பொருத்திய விமானம் ( ஐந்தாவது படம்). ஆனாலும் இந்த விமானம் சரியாக வடிவமைக்காததால் இந்த விமானம் அடிக்கடி விபத்துக்குள்ளான சமயத்தில் தான் போயிங்கின் 707 சில வாரங்களிலே அமெரிக்காவில் ரிலீஸ் ஆகி இன்று வரை சக்கை போடும் நிறுவனம் ( ஆறாவது படம்). அதன் பின் 1970 வரை ஜெட் விமானங்களே இருந்த போது முதன் முதலாய் ஜம்போ ஜெட் என்ற பெரிய விமானம் 1970 களில் போயின் 747 என்று அறிமுகபடுத்தியது. இதில் நான்கு எஞ்சின்கள் மற்றும் பெரிய கப்பாஸிட்டி மற்றூம் இரண்டு மாடி கொண்ட உலகத்தின் முதல் விமானம் இது தான் ( ஏழாவது படம்).

இதன் பின்பு பல விமானங்கள் வந்தாலும் போயிங்கை ஓரம் கட்டி உலகத்தின் முதல் பெரிய விமானமான ஏ 380 ஏர்பஸ்(எட்டாவது படம்). 853 பேர் பயணீக்கும் வகையில் உருவாக்கி இன்று நூறு வயதை நாம் கொண்டாடினாலும் சில மனிதர்கள் வாழ்க்கையில் இன்று வரை விமான பயணம் மேற்க்கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யம் தான்.

From Air Boat Line to A 380, 100 Years of Flying history in simple article with pictures shows how flying transformed in our life from 1 person – 300 crore persons flying……

அனைத்து படங்களையும் பார்க்க – https://www.facebook.com/media/set/?set=a.746470648704666.1073741858.100000252143571&type=1&l=9406380b30